PALEO vs VEGAN-A TAMIL DEBATE PART 2

என்னுடைய முந்தைய பதிவான விவசாயமும் வீகன் டயட்டும் என்பதில் தொடங்கிய பேலியோ மற்றும் வீகன் உணவு முறை இடையேயான வித்தியாசங்கள், ஏற்றத் தாழ்வுகள், போன்றவற்றை சுற்றுச்சூழல், ஆரோக்கியம் ஆகிய அடிப்படைகளில் நானும் பேலியோ நிபுணருமான நியாண்டர் செல்வன் அவர்களும் நடத்திய வாதப் பிரதிவாததின் காபி பேஸ்ட் இது. முகநூல் தாண்டி அனைவரும் அறிந்து கொள்ள இந்தப் பதிவு. நனிசைவ உணவு முறை தான் சிறந்தது என கூறவில்லை. இப்போதைய மனித இனத்தின் நிலைக்கு இதுவே உகந்தது என்பதே நமது வாதம். தானியம், அரிசி, பருப்பு எதுவும் வேண்டாம், மூன்று வேலை தரமான மாமிசம், .மிருக உள்ளுறுப்புகள், போன்றவற்றை மட்டும் உண்டாலே போதும் என்பதுதான் பேலியோ டயட் என்பது அவர்களின் வாதம். விவசாயம் தான் இறைச்சிக்கூடங்களை விட அதிக மாசு, சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கிறது என்பது அவர்களின் நம்பிக்கை. மனிதர்கள் தான் முக்கியம், மனிதர்களைத் தவிர எந்த உயிரும் பூமியில் ஆரோக்கியமாக இருக்க வேண்டாம், இறைச்சிக்காக வளர்க்கப்படும் மிருகங்கள் மட்டும் புல்லுணவு உண்டு கொழுத்திருந்தால் போதும் என்பது அவர்கள் கொள்கை. இனி தொடர்ந்து படிப்போம். 

|||இந்தியாவில் 60.4% விவசாய நிலம்.||| 60.4 சதவிகிதம் என்பதைஇந்தப் புள்ளி விவரத்தை அளிக்கும் நிறுவனம்,கீழ்க்கண்டவாறு விளக்குகிறது.
SHARE OF LAND AREA THAT IS ARABLE, UNDER PERMANENT CROPS AND UNDER PERMANENT PASTURES.” அதாவதுபாசனம் செய்து உழவு செய்யக்கூடியநிரந்தரமாக பயிர் செய்யப்பட்ட மற்றும் நிரந்தரமாக மேய்ச்சல் நிலங்கள் ஆக இருக்கும் நிலப்பரப்பு. மேய்ச்சல் நிலத்தில் மேயும் விலங்குகளின் எண்ணிக்கை செயற்கையாக உயர யாருடைய தேவை அதிகம்மேய்ச்சல் என்றால் மேய்ச்சல் மட்டும் அல்லபால் பண்ணைகளும்இறைச்சிப் பண்ணைகளும் தான். டிவி விளம்பரங்களைப் போன்றதல்ல அந்த மேய்ச்சல் நிலங்கள்.

மேலும்விவசாயத்திற்காக மட்டும் பயிரிடப்பட்ட நிலங்கள் என வகைப்படுத்தப் படுவது 35%.
நிரந்தரமாக பயிரிடப்பட்ட(ரப்பர்காபிதேயிலைபழங்கள்காய்கள்) நிலம் வெறும் 4% மட்டுமே.
இந்த 35 மற்றும் 4% நிலங்கள் தான் இங்கே மக்களுக்கும் உணவளித்துஏற்றுமதிக்கும் வகை செய்கிறது.

33% 
காடுகள். 20% சதவிகிதம் தான் தற்போதைய நிலவரம். இருந்தாலும்இப்போதைக்கு இதை அலசத் தேவை இல்லை.
|||மீதமுள்ள 7% நிலத்தில் தான் வீடுகள்மக்கள் எலலரும் இருக்கிறார்கள்.||| பூமியின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா மொத்தம் 2.5% நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பு 3287263 சதுர கிமீ. இதில் 7% என்பது 230,108 சதுர கிமீ. 125 கோடி மக்கள் இத்தனை சிறிய நிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்ன. தமிழ்நாட்டின் நிலப்பரப்பு 130,058 சதுர கிமீ. இரண்டு தமிழ்நாடு சேர்ந்த நிலப்பரப்பில் மொத்த இந்திய மக்கள் தொகையே இருக்கிறதா
|||இந்தியாவில் 51.5 கோடி மாடுகள்எருமைகள் உள்ளன‌|||

தேசிய பால் பொருட்கள் அமைப்பின் கணக்குப் படி2012 ஆம் வருடம் வரையில்,

இந்தியாவில் 52.97 கோடி ஆடுமாடுகள்மற்றும் 64.88 கோடி கோழிவாத்து போன்ற பறவைகளும் இருந்தன. அதாவது,இவை எல்லாம் 60 வயது 90 வயது வாழ்வதில்லை. இவற்றின் மொத்த ஆயுள் சராசரியாக ஓரிரு மாதங்கள்(கோழி போன்றவை) முதல் 5-7 வருடங்கள்.(பசுக்கள்ஆடுகள்இறைச்சிக்கான எருமைகள்கறவை மாடுகள் உட்பட.) ஆக மனிதனின் மக்கள் தொகை போல இந்த எண்ணிக்கையை எடுத்துக்கொள்ள முடியாது. இவை மேலும் மேலும் செயற்கையாக பெருக்கப்படுகின்றனஅழிக்கவும் படுகின்றன. 5 ஆண்டு சராசரி என்றாலும் கூட இந்தக் கணக்கு 3 முதல் 6 மடங்கு வரை பெருக்கப்பட வேண்டும். அதற்கு தேவைப்படும் நீர், மேய்ச்சல் நிலம் எல்லாவற்றையும் நம் கணக்கோடு ஒப்பிட்டுப் பாருங்கள். 
||| ஆக 7% பேருக்கு உணவிட 60.4% நிலபரப்பு தேவைபடுகிறது...அந்த நிலமும் வேளாண்மை குன்றி விட்டதால் பூச்சிகொலிமருந்துயுரியாஉரம் என 60% இந்தியா கெமிக்கல்களால் குளிப்பாட்டபட்டு தான் தானியங்கள் விளைவிக்கபடுகின்றன.விளைவாக நிலத்தடி நீர் மண்னாவதுஆறுகள்குளங்கள் விஷமாவது எல்லாம் நடக்கின்றன. ||| மேற்கூறிய புள்ளிவிவரங்ளின் தவறு இதில் பிரதிபலிக்கிறது. கெமிக்கல் குளிப்பாட்டல்பூச்சி மருந்து எல்லாம் இந்தியாவில் நடப்பதால் தான் நீங்கள் பத்திரமாக அமெரிக்காவில் பதுங்கிவிட்டீர்களாஇங்கே இறைச்சி மட்டும் எப்படிக் கிடைக்கிறதுஇறைச்சி,பால் என எல்லாமே ஹார்மோன்கெமிக்கல்தடுப்பூசிசெயற்கை இனப்பெருக்கம் என கழிசடையாகத் தான் இருக்கிறது. அப்படியென்றால் பேலியோ அமெரிக்காவுக்கு உகந்த்துஇந்தியாவுக்கு உகந்த்து அல்ல என ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது.

||| ஆக விவசாயம் மிகபெரும் சுற்றுபுறசூழல் பேரழிவை கொண்டுவருவதை கண்கூடாக காணலாம்.|||
மறுபடியும் முதல் இருந்தே வருகிறீர்கள். சரியான புள்ளிவிவரப்படி பெரும்பான்மையை மாமிசத்திற்காகவும்பிற கேட்டில்,லைவ்ஸ்டாக் தேவைக்காகவுமே உபயோகிக்கப்படுகிறது. இதைத்தான் என் முதல் பதிவில்பயிர் விவசாயம் மட்டுமே விவசாயம்இறைச்சிபால் தோல் எல்லாம் தொழிற்சாலைகள் என்று கூறியிருந்தேன். விவசாயப் புரட்சியும் தொழிற்புரட்சியும் வெகு தெளிவாய்க் குழப்பிக் கொள்ளப் பட்டிருக்கிறது. விவசாயத்தால் சுற்றுச்சூழல் அழிகிறதோ இல்லையோதொழிற்புரட்சியால்சுற்றுச்சூழல்விவசாயம் என எல்லாமே அழிகிறது. 
\\\ தியரட்டிக்கலாக 100% இந்தியர்கள் பேலியோவுக்கு மாறுகிறார்கள் என வைத்துக்கொள்வோம்....\\\

தியரிட்டிகல்லாக பார்த்தால் எப்படி கணக்கு சரியாக வரும்மீண்டும் கணக்கைப் பரிசீலிக்கவும். 
உடனடியாக 60.4% இந்திய நிலபரப்பு நமக்கு கிடைக்கும். 
 \\\ 7% நிலத்தில் நூறுகோடி இந்தியர்கள் வசிக்கையில் 60% இடத்தில் எத்தனை மாடுகள்பன்றிகள் மாதிரி பெரியமிருகஙக்ளை வளர்க்க முடியும் என யோசிக்கவும். \\\ கணக்கு தவறு. எத்தனை மாடுகள் வேண்டுமானாலும் வளர்க்கலாம்,ஆனால் அவற்றிற்கு காற்றை ஆகாரமாக கொடுத்துஅவற்றின் கழிவுகளை துரிதமாக அகற்ற முடியாது. 100 சதுர அடி நிலத்தில் நான் 25 மாடுகள் கூட வளர்ப்பேன். ஆனால் அதை சுகாதாரமாக பாதுகாக்க எவ்வளவு நீர் மற்றும் ஆற்றல் மற்றும் பணம் மற்றும் வளம் தேவை என்பதே கேள்வி. 
\\\ தியரட்டிக்கலாக ஒரு வருடத்துக்கு 1 ஆளுக்கு 2 மாடு அல்லது போதும்ஈரல்கிட்னி என உள்ளுறுப்புக்கள் அனைத்தையும்உண்கையில் வேறு காய்கறிபருப்புஅரிசி எதுவும் அவசியமில்லைகுழந்தைகள் 2 மாடு சாபிடமுடியாதுஒன்றே போதும்.\\\பேலியோ டயட்டில் இருக்கும் உங்களுக்கே சென்ற வாரம் மட்டும்வயிற்றுக்கறிக்கு ஒரு பன்றிவாலுக்கு ஒரு எருமை,ஸ்டேக்குக்கு ஒரு இளம் எருமைக்கன்றுபோன்றவை சராசரியாக தேவைப்பட்டுள்ளது. அது வீணாக்க் கிடந்த்து நான் உபயோகித்துக் கொண்டேன் என்று சொல்லி தப்பிக்க முடியாது. உங்களுக்கு அது தேவை என்றால் அது வெட்டப்பட்டு தான் தர வேண்டும். அனஸ்தீசியா கொடுத்து பாகம் பாகமாக ஆபரேசன் செய்தெல்லாம் ஒன்றும் விற்க முடியாது.  ஒரே ஒரு மாட்டை வெட்டி ஒரு குழந்தைக்கு ஒரு வாரம் அரிசிசோறுபருப்பு எதுவும் இல்லாமல் உணவளித்து விடுவீர்களாஏம்பா வீகனிசம் எக்ஸ்ட்ரீம் என அலறீயவர்கள் எங்கே போனீர்கள்அப்புறம் எத்துக்குயா பரிணாம வளர்ச்சிநாகரிகம்படிப்பு எல்லாம். பிள்ளைக்கு பேசாம வேட்டையாட மட்டும் கற்றுக்கொடுங்கள். கொண்டு போய் ஏதேனும் சமவெளியில் விட்டு விடுங்கள். வேட்டையாடிஉண்டு பேலியோலித்திக் சமூகத்தை மீண்டும் உருவாக்கிடுவோம். பிறந்ததே தின்பதற்கு மட்டும் தானே. கடைக்கு சென்று குழந்தைக்கு ஒரு மாடு வெட்டுங்கள்வீட்டுல பெரியவங்களுக்கு 2 மாடு வெட்டுங்கள் என்றா கேட்பீர்கள்? 
 ||| மாடுகளை ப்ரிரேஞ் முறையில் வளர்க்க துளி நீரை நிலத்தில் விடும் அவசியமில்லை..புல் தானாக முளைக்கும்புல்மட்டும் அல்லடாண்டலியன் உள்ளிட்ட வேறு செடிகளும் நிறைய முளைக்கும்மாடுகளுக்கு அதுவே போதுமானஉணவாகும் ||| நீங்கள் இன்னும் கற்பனையிலேயே மிதக்கிறீர்கள். இது ஒரு அபத்தமான வாதம். ப்ரி ரேஞ்ச் முறையில் நீர் எல்லாம் ஊற்றாமல் மாடு தானாக இனப்பெருக்கம் செய்து தானாக புல் மேய்ந்து வளர்வது 10,000 வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்ட்து. மாடுகளை என்ன ஆகாயத்திலா வளர்க்கப் போகிறீர்கள்நிலம் வேண்டாமா? 
\\\ இந்த நிலங்களை கெமிக்கலில் குளிபபட்டும் அவசியம் இல்லை\\\ நோ கமெண்ட்ஸ்
||| உரம்பூச்சிகொல்லி மருந்து அவசியம் இல்லை ||| 
காவிரி நீருக்கு கர்நாடகதமிழக விவசாயிகள் உதைத்துக்கொள்ளும் அவசியம் இல்லைகுடிநீருக்கு மட்டும் எனில்இந்தியாவில் எல்லாருக்கும் ஏராளமான நீர் உள்ளதுவிவசாயத்துக்கு தான் நீர் போதுவதில்லை
||| நீங்கள் அனைவரும் அமெரிக்காவில் என்ன செய்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. இங்கே நிலத்தடி நீர் காலி. அதற்கு முக்கிய காரணம் தொழிற்புரட்சிஇரசாயனம்பிறபொருட்கள் இறைச்சி என அனைத்து தொழிலகமும் இதில் சேரும். மக்கள் தொகை மிக மிக அதிகம். கர்நாடகா பிரச்சனை இங்கே அலசத் தேவை இல்லை. 
\\\ மக்கலின் உடல் நலம் மேம்பாடடையும்
மருத்துவமனைகள் மூடபடும் \\\ குப்பை உணவுகளும்செயற்கை விவசாய முறையும் ஒழிந்தாலே இது தானாக நடக்கும். எல்லாரும்மூன்று வேளை மாமிசம் சாப்பிட வேண்டும் என்றில்லை. 
அடுத்த ஆப்ஷனை பார்ப்போம்

100% 
இந்தியர்கள் வீகன் ஆகிறார்கள்
\\\ஆர்கானிக் விவசாயம் மூலம் சத்தியமா இத்தனை பேருக்கு தானியம் விளைவிக்க முடியாதுஅதனால் தான் பசுமைபுரட்சிஉரம்குட்டை கோதுமை எல்லாம் அவசியமானது\\\ ஆர்கானிக் என்பது தனிக் கலையோபோதிதர்மர் சொல்லிக் கொடுக்க கராதே வோ இல்லை. ஆங்கிலேயனின் ஆட்சிக்கு முன்பு நாம் இயல்பாக செய்து வந்த்து தான். மக்கள் தொகைக்கு ஏற்ற புரொடக்ஷன் இல்லை. காரணாம்பெரும்பான்மை நிலங்கள் பல்வேறு காரணங்களால் வீணாகிவிட்ட்து. வீடுமனை போன்றதும் இதில் அடங்கும். முன்பே சொன்னது போல பணத்துக்கு ஆசைப்பட்டு பலரும் ஆவின்ங்களைக் கொல்ல ஆரம்பித்தனர். காலி ஆனதும்மேலும் இனப்பெருக்கம் செய்ய செயற்கை முறையை நாடினர். மாடு வைத்து உழவு செய்து சம்பாதிப்பதை விடஅதை இறைச்சிக்கும்தோலுக்கும் விற்றால் அதிக லாபம் ஏற்படுத்திக் கொடுத்தான் வெள்ளையன். 10000 வருடங்களுக்கு முன்பு நடந்த்து இப்போ சாத்தியம் என்றால்1000 வருடங்களுக்கு முன்னால் இருந்த இயற்கை விவசாயம் செய்வதும் சாத்தியமே. மொட்டைமாடித் தோட்டம் மூலம் வாராவாரம் எங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் சிலவற்றை நான் அறுவடை செய்து கொள்கிறேன். இதை யாராலும் செய்ய முடியும். உங்களுக்கு தேவையான பேலியோ மாமிசத்திக்கான ஆடு மாடுகளை ப்ரீ ரேஞ்சாட நீங்களே உங்கள் வீட்டு மொட்டை மாடிகளில் வளர்த்து,அவ்வப்போது வால்நாக்குகிட்னி என அறுத்து வாரா வாரம் எடுத்துக் கொள்ள முடியுமாஅமெரிக்காவில் மொட்டை மாடி இல்லையாஆனால் தியரட்டிகலாகஇந்தியாவில் மொட்டை மாடி வீடுகள் அதிகம். இதற்கு மேல் இதில் சொல்ல எதுவும் இல்லை. 
||| ஜிஎமோ மாதிரி டெக்னாலஜியை கொண்டுவந்து தான் விவசாயம் மூலம் இத்தனை பேருக்கும் உணவளிக்க முடியும் |||நம்மாழ்வார் உங்களை ஆசிர்வதிக்கட்டும். இதற்கான பதில் மேலே கூறியாயிற்று. 
ஆர்கானிக் விவசாயம்  சாத்தியமே. 

||| மக்கலின் உடல்நலம் குன்றும்வைட்டமின்மினரல் இன்றியும்சுஅக்ர் பிரசராலும் பலகோடி மக்கள் பாதிப்படைவஆர்கள்.மருந்துகம்பனிகள்மருத்துவமனைகள் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் ||| மருத்துவமனைகள் கொள்ளை லாபம் சம்பாதிப்பது இயற்கை விவசாயம் அழிந்துகுப்பை உணவுகளை மக்கள் உண்ணத்தொடங்கியதால் தான். இதர நோய்களும் அவ்வாறே தோன்றின என்பதை நாம் அனைவரும் அறிவோம். இயற்கை விவசாயம் அழிய யார் காரணம்எந்த டிமாண்ட் காரணம் என்பதையும் நாம் அலசிவிட்டோம். ஒரு முறை நீங்கள் மீனின் கண்கள் நம் கண்ணுக்கு தேவையான ரெட்டினால் கொண்டுள்ளது என்பது போலவும்அது உண்ணாத சைவர்கள் தான் பெரும்பாலும் கண் குறைபாடு கொண்டுள்ளார்கள் என்றும் எழுதியிருந்தீர்கள். என் பாட்டி90 வயதில் இறந்தார். இறக்கும் வரை அவர் கண் குறைபாடு எதுவும் இல்லை. அவர் பால் தவிர்த்து வேறு எந்த மீனின் கண்ணையும் உண்ட்தாக எனக்கு தெரியவில்லை. நான் வாரத்திற்கு 60 மணி நேரம் கணிணியில் தான் வேலை செய்கிறேன். எனக்கும் இது வரை கண்ணாடி அவசியமோகண் குறைபாடோ வந்த்தில்லை.

அது அந்தக்காலம்அப்போ அவுங்க சாப்பிட்ட உணவு ஊட்டச்சத்தானது என்றால்நிச்சயம் என் பாட்டி பேலியோ இல்லை. கம்புதினைகேழ்வரகுநெல்லிக்காய் என இயற்கையாக உண்டவர்தான்.
என் லைஃப்ஸ்டைலை நான் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறேன். மீனின் கண் எனக்குத் தேவைப் படுவதில்லை. ஏதோ தோன்றியதுசொல்லிவிட்டேன்.  
|| ஆக வீகன் உணவை விட பேலியோ உணவு சுற்றுசூழலுக்கு எத்தனை உயர்வானது என்பது விளங்கும் ||

உங்களுக்கும் விளங்கியிருக்கும் என நினைக்கிறேன்.


நன்றி.


.
.
.