ஹலால்-நடப்பது என்ன?நீங்கள் ஹலால் என்று புசிக்கும் உணவு உண்மையில் ஹலால் இல்லை என்பதை அறிவீர்களா? ஆம். இந்தியாவின் மாமிசக் கூடங்களில் இருந்து உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படும் மாமிச உணவுகள் முற்றிலும் ஹலால் அல்ல என்பது வருத்த்திற்குரிய உண்மை.
“ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் பொழுதோ, அல்லது வளர்ப்பின் பொழுதோ, வெட்டப்படும் முன்போ அல்லது அவற்றின்(மிருகங்களின்) பொதுநலத்தின் போதோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால், அவற்றின் உடலில் இருந்து பெறப்படும் மாமிசம் முற்றிலும் ஹராம் ஆகும்”
கொடூரமான முறையில் பெறப்படும் மாமிசம்(AL-MUTHIAH) புசிப்பதற்கு முற்றிலும் தவறானது.(AL-MUJATHAMADH)
-இமாம் B.A.ஹஃபிஜ் அல் மஸ்ரி, ஷா ஜெஹான் பள்ளிவாசல், இங்கிலாந்து.
நான் முன்பு கூறியிருந்ததைப் போலவே, குரான் திருமறையானது மிருகங்களை ஒருபோதும் உணவின் ஆதாரமாக கூறவில்லை. மாறாக அவைகள் ஒவ்வொன்றையும் இறைவன் படைத்த தனித்தன்மை கொண்ட உலகங்களாகவே கூறுகிறது.
அல்லாஹ்வைப் போற்றுதல் இப்பூமியிலும், தேவ உலகத்திலும், சொர்கத்திலும் உள்ள அனைத்து உயிர்களாலும், அங்கே காற்றில் சிறகை விரித்து பறக்கும் பறவைகளாலும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சீவனும் அவனைப் பிரார்த்திக்க அதன் பிரத்தியேக வழிகளையும் அறிந்திருக்கும் என்பதை அவனும்(அல்லாஹ்) அப்பிரார்த்தனைகளை கேட்டறிவான்.
Seest thou not that it is Allah whose praise all beings in the heavens and on earth do celebrate, and the birds(of the air) with wings outspread? Each one knows its own mode of prayer and praise, and Allah knows well that they do. Sura 24:41
ஹஜ்ரத் உமர் (ரா) அவர்கள், ஒருமுறை சாலை வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார். அங்கே, ஒரு மனிதன், இன்னும் சிறிது நேரத்தில் உணவாகப் போகும் ஒரு ஆட்டிற்கு தண்ணீர் வைக்க மறுப்பதை உமர் காண்கிறார். உடனே உமர், தன் கையிலிருந்த சாட்டையால் அம்மனிதனை அடித்து தண்டித்து, ஆட்டிற்குத் தண்ணீர் வைத்தபின் அதை உணவாக்கச் சொல்கிறார். மேலும், ஹலால் பற்றி அவனுக்கு விளக்குகிறார். ஆனால் இது, நம் நாட்டில் இறைச்சி மிருகங்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பார்க்கும் பொழுது முற்றிலும் முரண்பாடாக அமைகிறது. நாம் இவற்றை உண்ணாதிருத்தல் மூலம் நமக்கு துன்பமோ, பாவமோ நேரப்போவதில்லை. ஆனால், நாம் அல்லாஹ்வை மறந்து சுவையை மட்டுமே நோக்கி செல்வதால் இவற்றை நாம் கவனிக்கத் தவறுகின்றோம்.
எனவே அசைவ உணவு முறையில் என்னதான் முயன்றாலும், ஒரு நன்மையும் காண முடியாது. மாறாக நம் உடலுக்கு நோயும், மனதுக்கு அழுத்தமும், ஆன்மாவுக்கு பாவமும் தேடிக் கொள்கிறோம் என்பதை இங்கே உரைக்க விரும்புகிறேன்.
ஹலால் பற்றிய ஒரு ஆழ்ந்த விசாரணைக்குப் பின், ஒரு முழுமையான ஹலால் கட்டுரையை இங்கு பதிகிறேன்.
நனிசைவ உணவு முறைக்கு வாருங்கள். இது முற்றிலும் மனிதாபிமானமுள்ள, இறைவனின் ஸ்பரிசம் பெறுவதற்கு மிகவும் உகந்த ஒரு அற்புதமான உணவு முறையாகும். உணவு முறை என்பதைத் தாண்டி இது மனிதம் ஆகும். விட்டுக்கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. இது இறைவனிடம் சரண் அடைவதாகும். அவன் அன்பினால் உருவான வாழ்க்கையை சுவைமொட்டுகளுக்காக தொலைத்து விடாதீர்கள்; கலைத்தும் விடாதீர்கள்.
நன்றி.
இஸ்லாம்-உயிர்களின் முக்கியத்துவம்ஒரு வழியாக இஸ்லாமிய கொள்கைகளும் அதன் தவறான புரிதல்களும் பற்றிய நீண்ட ஆய்வுக்குப் பின் இந்த இடுகையில் அவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது. பயங்கரவாதத்தையும் இஸ்லாத்தையும் தொடர்பு செய்து பலர் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதில் சில இஸ்லாமியர்களும் அடக்கம் என்பது வருத்தத்திற்குரிய செய்தி. ஆனால், உயிர்களின் முக்கியத்துவம் பற்றி இஸ்லாம் என்ன எடுத்துரைக்கிறது என்பது இன்றும் சிலருக்கு புரிவதில்லை. அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். இதை செவ்வனே செய்து முடிக்க எனக்கு அருளிய எல்லாம் வல்ல இறைவனுக்கும், என் இஸ்லாமிய நண்பர்கள் சையத் ரிஜ்வி(SYED RIZVI) ஹலிமா இளவரசி, பெனாசிர் சுரையா, ஆகியோருக்கும் நான் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன்.
பலியிடுதல்
பலியிடுதல் பற்றி கூறும் பொழுது நான் ஏற்கெனவே எனது முந்தைய இடுகைகளில் கூறியிருந்த ஆபிரகாம் என்பாரின் தியாக உள்ளத்தையும் அவர் இறைவனுக்காக தன் அன்பு மகனையே பலியிட முன்வந்ததும் இங்கே நினைவில் வைக்க வேண்டும். கனவில், தானே தன் கையால் தன் மகனைக் கொல்வது போல ஒரு காட்சியைக் கண்ட ஆபிரகாம், இறைவன் தான் கனவின் மூலம் தன் மகனை விழைந்து கேட்கிறார் போலும், என நினைத்துக் கொண்டு, தன் மகனையே பலியிட முன்வருகிறார். அங்கே இறைவன் தோன்றி, தான் எந்த பலியையும் விரும்பவில்லை என்றும், தன் உயிரினும் மேலான மகனையே பலியிட துணிந்த, பக்தி மெச்சத்தக்கது என்றும், கூறுகிறார். இதன் மூலம் உண்மையான பக்தியும், இறைவன் மேல் நாம் கொண்டுள்ள அளவு கடந்த அன்பும் மட்டுமே அவனைச் சேரும், அன்றி, நாம் வெட்டும் மிருகத்தின் இரத்தமோ, சதையோ இறைவனது விருப்பத்தில் சேராது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
“Its Not their flesh, nor their blood, that reaches Allah: nor yet their blood, but your devotion will reach him”-Quran 2:196, 2:28.35-37
கொன்றால் தான் உயிர் வாழ முடியுமா, அப்படியென்றால், வதைக்காமல் கொல்லுங்கள் என்று, திருமறையில் ஒரு தீர்க்கதரிசி கூறியிருக்கிறார்.
ஒட்டகத்தைக் கொல்லும் பொழுது, அதன் இரத்தமோ சதையோ நிச்சயம் இறைவனை அடையாது என்பதை இனியாவது நினைவில் கொள்ள வேண்டும்.
தாவரங்களின் வலி
இஸ்லாமிய சகோதரர்கள் சிலர், இணையத்தில் உலாவரும் சில பொய்யான அல்லது அர்த்தமற்ற வாதங்களினால் பாதை மாறி விடுகிறார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று, தாவரங்களும் வலி உணரும் என்ற தவறான கோட்பாடு. இதைப் பற்றி நாம் முன்பே கூறியிருந்தாலும், இங்கு இன்னும் சற்று ஆழமாக அறிந்து கொள்ளலாம். இந்த அர்த்தமற்ற வாதமானது, உணவுக்காக எந்த உயிரைக்கொல்வதும் தவறில்லை என்று கூறுவோருக்கு வேதவாக்காக இருக்கிறது. ஒரு மிகப்பெரும் உண்மையை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அது, தாவரங்களுக்கு உயிர் உண்டு ஆனால், அவற்றிற்கு நரம்பு மண்டலமோ, வலியை உணரும் திசுக்களோ இல்லை. ஜாகீர் நாய்க் கூறுகிறார், எந்த உயிரையும் கொல்லாத ஒரு உணவு முறை இருக்குமாயின் அதை நான் மறுக்காமல் மேற்கொள்வேன். ஆனால் சைவ உணவு முறையில் கூட தாவரங்கள் உயிர் நீக்கப்படுகிறது எனவே அசைவ உணவு முறையை மேற்கொள்வதில் தவறேதும் இல்லைஆனால் ஜாகீர் நாயக் கூறுவது போல எந்த உயிரையும் கொல்லாத உணவு முறை ஒன்று இருக்கிறது. அது, பழங்கள், விதைகள் மற்றும் உதிர்ந்த உலர்பழங்கள் போன்றவற்றைக் கொண்டு உயிர் வாழும் அற்புதமான உணவுமுறையாகும். இதன் மூலம் எந்த தாவரமும் துன்புறுத்தப்படவில்லை, கொலை செய்யப்படுவதில்லை. எனவே இத்தகைய வாதத்தை முன் வைப்போர் இந்த FRUITARIAN உணவு முறையை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா? என்பது என் கேள்வி.
மேலும், தாவரங்கள் வலியால் துடிப்பதையும் அலறுவதையும் கேட்க ஒரு தனிக்கருவி இருப்பதாக ஒரு பொய்யான தகவலையும் இவர்கள் முன்வைக்கிறார்கள். அதாவது, நம் செவித்திறனுக்கு அப்பால் உள்ள தாவரங்களின் அலறலைக் கேட்க ஒரு தனிக்கருவி உண்டு என்று இவர்கள் தங்கள் வாதத்தை பலப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் இதற்கு தகுந்த சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லை. ஏனென்றால் அப்படியொரு கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
உண்மை யாதெனின், தாவரங்களானது, அழுத்தத்திற்கு உட்படும்போது, எதீலின்(ETHYLENE) எனும் இரசாயனத்தை வெளிவிடுகின்றன. இதன் மூலம், அத்தாவரம் செல் வளர்ச்சியை அதிகமாக்க முற்படுகிறது அல்லது அழுத்தத்திற்கு எதிராக செயல்பட முனைகிறது என்பதே உண்மை. இந்த இரசாயன வெளியேற்றத்தை பல்வேறு கோணங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட அலைவரிசை வரை லேசர் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த ஆராய்ச்சி, இரசாயன வெளிப்பாடானது தாவரங்கள் அழுத்தத்தை தவிர்க்கும் அல்லது எதிர்க்கும் ஒரு பதில் செயலே அன்றி வலியோ பயமோ இல்லை என்பதை தெளிவாக்கியுள்ளது.
தாவரங்களின் வலியையும் கொலையையும் பற்றிக் கவலைப்படுவோர் கூட சைவ உணவுக்கு மாற வேண்டும். ஏனென்றால், ஒரு மனிதன் ஒருவேளை சாப்பிடும் மாமிசத்தை உருவாக்கப் பயன்படும் தாவரங்களின் அளவானது, ஒருவேளை தாவர உணவு உண்ணத் தேவைப்படும் தாவரங்களின் அளவை விடவும் அதிகமானது. சைவ உணவு என்பது மிகக்குறைந்தபட்ச வலியில்லாத கொலைகளைக் கொண்டது என்றும் அர்த்தம் கொள்ளலாம். மேலும், நனிசைவ உணவு முறையில் எந்த உயிரும் துன்புறுத்தப்படவில்லை என்பது நிதர்சனம்.
எனவே, தவறான தகவல்கள் மூலம் மனதில் ஏற்பட்டுள்ள கறைகளை களைவது உண்மையான இஸ்லாமியனுக்கு அழகு.  ஏனென்றால், தாவரங்களின் வலி அல்லது உயிர் பற்றிய கொள்கைகளும், வாதங்களும் இணையத்திலோ அல்லது அர்த்தமற்ற பேச்சுகளிலோ எழும் ஒரு அவசித்தாந்தம் ஆகும். இவை, சில நல்லெண்ணம் கொண்ட இஸ்லாமியர்களை முட்டாள் ஆக்குவதோடு, மாமிசம் சாப்பிடும் கீழ்த்தனமான செயல்களை தவறல்லாதது போல போதிக்கிறது. இவ்வாறு ஒரு மனிதனை அஞ்ஞானத்திற்கு அழைத்துச் செல்வதும் தவறான தகவல்கள் உரைப்பதும் உம்மாஹ்(UMMAH) கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது என்பதை ஜாகீர் நாயக் போன்ற இஸ்லாமியத் தோழர்கள் உணர வேண்டும். மேலும், இத்தகைய மூடத்தனமான தகவல்களை தங்கள் தளத்திலும், வலைப்பூவிலும், விவாதங்களினின்றும் நீக்குமாறு இஸ்லாமிய தோழர்களை இங்ஙனம் கேட்டுக்கொள்கிறேன்.
கருணையும் பரிவுள்ளமும்
குரான் திருமறையானது, மிருகங்கள் எனும் உயிர்களின் நல்வாழ்வு குறித்து மிகவும் தெளிவாக எடுத்துரைக்கிறது.
அல்லாஹ்வைப் போற்றுதல் இப்பூமியிலும், தேவ உலகத்திலும், சொர்கத்திலும் உள்ள அனைத்து உயிர்களாலும், அங்கே காற்றில் சிறகை விரித்து பறக்கும் பறவைகளாலும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சீவனும் அவனைப் பிரார்த்திக்க அதன் பிரத்தியேக வழிகளையும் அறிந்திருக்கும் என்பதை அவனும்(அல்லாஹ்) அப்பிரார்த்தனைகளை கேட்டறிவான்.
Seest thou not that it is Allah whose praise all beings in the heavens and on earth do celebrate, and the birds(of the air) with wings outspread? Each one knows its own mode of prayer and praise, and Allah knows well that they do. Sura 24:41
மேலும்,
அங்கே (வாழும்) மிருகங்களும் அல்ல, சிறகால் பறக்கும் பறவையும் அல்ல, ஆனால் (உன்னில் ஒன்றான) உன்னைப் போன்ற ஒரு உயிர்க் கூட்டமே ஆகும். திருமறையில் ஒதுக்கப்பட்ட ஜீவன் ஒன்றுமில்லை, எனவே அவை அவற்றின் இறைவனிடம்(அல்லாஹ்) இறுதியில் ஒன்று கூடவேண்டும். சுரா 24:41.
There is not an animal (that lives) on earth, nor a being that flies on its wings, but (forms part of) communities like you. Nothing have we omitted from the book, and they (all) shall be gathered to their lord in their end. Sura 24:41.
இதுவே திருமறை குரான் ஆனது உயிர்களின் முக்கியத்தும் குறித்து எடுத்துரைக்கும் நற்செய்திகளாகும். திருமறை, மிருகங்கள் என்று நாம் தாழ்த்துபவைகளும் அவைகளுக்கு மட்டுமே அறிந்த நாடுகளாகவும் உயிர்க்கூட்டங்களாகவே வாழ்கின்றன என்றும், இறைவனைப் பிரார்த்திக்க அவைகளுக்கென்று ஒரு தனி முறை உண்டு என்றும் கூறுகிறது. ஆனால், மனிதனைப் பொறுத்த வரை அவை நம் சுவை மொட்டுக்களுக்காக படைக்கப்பட்ட அற்ப ஜீவராசிகளாகவும் அடிமைகளாகவும் மட்டுமே தெரிகிறது. நாம் உண்ணும் கோழியானது, மரணத்திற்கு முன்னால் அவற்றின் அலகுகள் உடைக்கப்பட்டே கொல்லப்படுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். கால்நடைகளின் கொம்புகள் அவை உயிருடன் இருக்கும் பொழுதே உடைக்கப்பட்டு மனக்குமுறலுக்கு ஆளாகியே நம் தட்டுக்கு வருகிறது என்பதை எத்தனை பேர் அறிவீர்கள். இவை எல்லாம் தேவையா என்று நின்று சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே. உணவாக மட்டும் பார்க்காதீர்கள், அவற்றின் உயிரையும் இறைவன் அவற்றிற்கு அளித்த வாழ்க்கையையும் பாருங்கள். இத்தகைய கொடூரங்களுக்கு நீங்கள் ஒரு காரணமாக இருக்க வேண்டுமா? வாழ்க்கையில் வெளிச்சத்தையே(அல்லாஹ்) காணாத படி பல மிருகங்கள் மாமிச தொழிற்கூடங்களில் அல்லல் படுகின்றன. இது தவறில்லையா? இத்தகைய கொடூரமான தொழில் முறைகளும் வழக்கங்களும் தீர்க்கதரிசியின் (முகமது சல்) அவர்களது கொள்கைகளை முற்றிலும் மீறுகின்றன. நபிகள் அவர்கள், மரணத்திற்கு முன் வரை ஒரு உயிரினம் ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். நமது அற்பமான சுவைக்காக இறைவனைப் பழித்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள் தோழர்களே.


நன்றி,
காதலுடன்,
ஜானெஹ் ஷங்கர்