நடிகர்/பாடகர்/இயக்குனர் என பல்வேறு முகங்களை தனக்குள்ள வெச்சிருக்க தனுஷ், சுற்றுச்சூழல் ஆர்வலர், மற்றும் மிருகங்களை நேசிக்கும் சிறந்த மனிதராகவும் தன்னை வெளிப்படுத்தறார். இங்கே படிங்க... 2011-ஆம் ஆண்டின் சிறந்த கவர்ச்சிகரமான சைவர்(VEGETARIAN) என நடிகர் தனுஷை பீட்டா அமைப்பு மக்களின் ஓட்டு அடிப்படையில் தேர்வு செய்துள்ளது.. பெண்கள் மட்டும் சளைத்தவர்களா என்று மல்லிகா ஷெராவத்தும் இப்போட்டியில்(!) வெற்றி பெற்றுள்ளார்.
தனுஷ் இது பற்றி சொல்லும் பொழுது,
நான் சைவ உணவில் ரொம்ப லைட்டாவும், ரிலாக்ஸ்டாகவும் ஃபீல் பண்றேன். மேலும் ஒவ்வொரு தடவை நான் சாப்பிட உட்காரும் போதும் சுற்றுச்சூழலுக்கு ஒரு நன்மை செய்யுறேன். வெஜிடேரியனா இருக்கறதுல பெருமைப் படறேன்.
இப்படி சொல்லியிருக்கார். இனிமேலும் நீங்க SOUP BOY இல்ல தனுஷ். இயற்கைக்கு நீங்க ஒரு சூப்பர் பாய்!
கோடான கோடி தனுஷ் ரசிகர்களுக்கும் இந்த நல்ல விஷயம் போய் சேரும் விதமா, தனுஷ் தன்னுடைய படங்களில் வெஜிடேரியனா இருப்பது பற்றிய நன்மையை ஒரு பன்ச் டயலாக் மூலம் சொன்னா நல்லாயிருக்கும். அடுத்த இடுகையில் மீண்டும் சந்திக்கிறேன்.
நன்றி,
காதலுடன்,
click here to read the report by PETA in ENGLISH 

This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 2.5 India License.
 



 
  
