ஹலால்-நடப்பது என்ன?



நீங்கள் ஹலால் என்று புசிக்கும் உணவு உண்மையில் ஹலால் இல்லை என்பதை அறிவீர்களா? ஆம். இந்தியாவின் மாமிசக் கூடங்களில் இருந்து உலகமெங்கும் ஏற்றுமதி செய்யப்படும் மாமிச உணவுகள் முற்றிலும் ஹலால் அல்ல என்பது வருத்த்திற்குரிய உண்மை.
“ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் பொழுதோ, அல்லது வளர்ப்பின் பொழுதோ, வெட்டப்படும் முன்போ அல்லது அவற்றின்(மிருகங்களின்) பொதுநலத்தின் போதோ வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருந்தால், அவற்றின் உடலில் இருந்து பெறப்படும் மாமிசம் முற்றிலும் ஹராம் ஆகும்”
கொடூரமான முறையில் பெறப்படும் மாமிசம்(AL-MUTHIAH) புசிப்பதற்கு முற்றிலும் தவறானது.(AL-MUJATHAMADH)
-இமாம் B.A.ஹஃபிஜ் அல் மஸ்ரி, ஷா ஜெஹான் பள்ளிவாசல், இங்கிலாந்து.
நான் முன்பு கூறியிருந்ததைப் போலவே, குரான் திருமறையானது மிருகங்களை ஒருபோதும் உணவின் ஆதாரமாக கூறவில்லை. மாறாக அவைகள் ஒவ்வொன்றையும் இறைவன் படைத்த தனித்தன்மை கொண்ட உலகங்களாகவே கூறுகிறது.
அல்லாஹ்வைப் போற்றுதல் இப்பூமியிலும், தேவ உலகத்திலும், சொர்கத்திலும் உள்ள அனைத்து உயிர்களாலும், அங்கே காற்றில் சிறகை விரித்து பறக்கும் பறவைகளாலும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சீவனும் அவனைப் பிரார்த்திக்க அதன் பிரத்தியேக வழிகளையும் அறிந்திருக்கும் என்பதை அவனும்(அல்லாஹ்) அப்பிரார்த்தனைகளை கேட்டறிவான்.
Seest thou not that it is Allah whose praise all beings in the heavens and on earth do celebrate, and the birds(of the air) with wings outspread? Each one knows its own mode of prayer and praise, and Allah knows well that they do. Sura 24:41
ஹஜ்ரத் உமர் (ரா) அவர்கள், ஒருமுறை சாலை வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார். அங்கே, ஒரு மனிதன், இன்னும் சிறிது நேரத்தில் உணவாகப் போகும் ஒரு ஆட்டிற்கு தண்ணீர் வைக்க மறுப்பதை உமர் காண்கிறார். உடனே உமர், தன் கையிலிருந்த சாட்டையால் அம்மனிதனை அடித்து தண்டித்து, ஆட்டிற்குத் தண்ணீர் வைத்தபின் அதை உணவாக்கச் சொல்கிறார். மேலும், ஹலால் பற்றி அவனுக்கு விளக்குகிறார். ஆனால் இது, நம் நாட்டில் இறைச்சி மிருகங்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பார்க்கும் பொழுது முற்றிலும் முரண்பாடாக அமைகிறது. நாம் இவற்றை உண்ணாதிருத்தல் மூலம் நமக்கு துன்பமோ, பாவமோ நேரப்போவதில்லை. ஆனால், நாம் அல்லாஹ்வை மறந்து சுவையை மட்டுமே நோக்கி செல்வதால் இவற்றை நாம் கவனிக்கத் தவறுகின்றோம்.
எனவே அசைவ உணவு முறையில் என்னதான் முயன்றாலும், ஒரு நன்மையும் காண முடியாது. மாறாக நம் உடலுக்கு நோயும், மனதுக்கு அழுத்தமும், ஆன்மாவுக்கு பாவமும் தேடிக் கொள்கிறோம் என்பதை இங்கே உரைக்க விரும்புகிறேன்.
ஹலால் பற்றிய ஒரு ஆழ்ந்த விசாரணைக்குப் பின், ஒரு முழுமையான ஹலால் கட்டுரையை இங்கு பதிகிறேன்.
நனிசைவ உணவு முறைக்கு வாருங்கள். இது முற்றிலும் மனிதாபிமானமுள்ள, இறைவனின் ஸ்பரிசம் பெறுவதற்கு மிகவும் உகந்த ஒரு அற்புதமான உணவு முறையாகும். உணவு முறை என்பதைத் தாண்டி இது மனிதம் ஆகும். விட்டுக்கொடுப்பதற்கு ஒன்றுமில்லை. இது இறைவனிடம் சரண் அடைவதாகும். அவன் அன்பினால் உருவான வாழ்க்கையை சுவைமொட்டுகளுக்காக தொலைத்து விடாதீர்கள்; கலைத்தும் விடாதீர்கள்.
நன்றி.