“இறைவன் பிற உயிர்களைப் போலவே மனிதனைப் படைத்தான். மனிதனும் பிற உயிர்களைப் போன்றே இறைவனைக் காண்கிறான். அதனால், மதம் எனும் கூண்டில் இறைவனை அடைத்து கேளிக்கை செய்கிறான்”
இங்கே, மதம் என்பதைத்தாண்டி மனிதம் எனும் பசுமையான விருட்சத்தை விதைக்கவே நான் எழுதுகிறேன். ஆதலால், இங்கே குர் ஆன், விவிலியம், கீதை போன்ற புனித நூல்களின் சாரங்களைப் பேசி அவற்றின் புனிதத்தை களங்கப்படுத்த நான் விரும்பவில்லை.
ஆனாலும், சில நேரங்களில், மதங்களின் தேவை இன்றியமையாதிருக்கும் பட்சத்தில், அவற்றின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் விவாதிக்கப்படலாம். இதன் மூலம், மதம் சார்ந்த மனிதர்களின் கருத்துக்கள் விவாதிக்கப்படுமே ஒழிய மதங்களும், கடவுள்களும் என் இடுகைகளில் விவாதிக்கப்படமாட்டா என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சைவ உணவு முறை பற்றிய அனைத்து கேள்விகளும் விவாதங்களும் இங்கே பதிலளிக்கப்படும்.