காலை எழுந்தவுடன் காபி;
வாயில்லா ஜீவன் என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும் அந்தப் பசுக்கள் உண்மையில் வாயை கண்களில் கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதன் தான் அதை கவனித்துக் கேட்கத் தவறி காதில்லா ஜீவனாக வலம் வருகிறான் என்பது மிகவும் கசப்பான உண்மை.நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகள் போன்றே மாடுகளும் கூட ஒரு அலாதியான உயிரினம் தான். அவைகளும் தனித்தன்மை பல கொண்டு தமக்குள்ளே வெவ்வேறு விதமான குணநலன்களைப் பெற்றிருக்கின்றன. சில முரண்டு பிடிக்கும், சில கூச்சம் கொண்டு ஒதுங்கி நிற்கும். சில நட்பு பாராட்டும், சில ஆதிக்கம் செலுத்தும். சமீப காலங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகள் பலவும் பசுக்கள் புத்திக்கூர்மை நிறைந்தவை என்று நிரூபிக்கின்றன. பசுக்கள் தமக்குள் இனம் கண்டு பழகுவதையும், நட்பு பாராட்டுவதையும், நிகழ்ச்சிகளை நீண்ட காலம் நினைவு பாராட்டுவதையும், எதிர்காலம் பற்றி வருத்தம் கொள்வதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து நிரூபித்துள்ளார்கள். மேலும் மனிதர்களைப் போலவே வெற்றியைக் கொண்டாடும் தன்மையும், பாவனைகள் செய்து சந்தோஷங்களைப் பறிமாறிக் கொள்கின்றன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிக்கல் என்னவென்றால், அவை தோலுக்காகவும், மாமிசத்துக்காகவும் இனப்பெருக்கம் செய்யப்பட்டு கொல்லப்படுகின்றன. பிற ஜீவராசிகளைப் போன்றே அவைகளும், குடும்பத்தில் இருந்து பிரிக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் விரும்புவதில்லை. அவை பிரிவின் சோகத்தை ஆழமாக உணர்கின்றன. பசுக்கள் 7 அடி உயரம் கொண்ட சுவற்றை தாண்டியும், நீந்தியும், பல மைல்கள் நடந்து சென்று தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்ட கன்றை சேர போராட்டங்கள் பல செய்கின்றன. ஆனால் ஆதிக்கம் செலுத்தும் மனிதன் மனிதனாக இல்லாமல் போவதால் அவை கொல்லப்படுகின்றன. பெற்ற தாய் முன்னே பிள்ளை கொல்லப்பட்டு தோலுரிக்கப்படும் அவலம் தோல் பட்டறைகளில் நடக்கிறது. மனிதத்தை உலகுக்கே எடுத்துக் கூறும் வேதங்களும் இதிகாசங்களும் நிறைந்த நம் நாடு பணத்தை நோக்கி சுழல்வதால் ஏற்பட்ட மாய வலையில் மனிதம் மறைந்து போய்விட்டது. :(
இன்று பசுக்களும் எருதுகளும் இராட்சத இயந்திரங்கள் ஓடும் தொழிற்சாலைகளில் கட்டிவைக்கப்பட்டு இயந்திரங்கள் மூலமாக பால் கறக்கப்படுகின்றன. இயந்திங்கள் அதிகப் பாலை உறிஞ்சி எடுப்பதற்கே முற்படுகின்றன. இயல்பாக சுரக்கும் பாலை விட பல மடங்கு அதிகம் பாலை கறப்பதற்கு அவை அதிக அழுத்தம் கொடுக்கின்றன. இந்த அழுத்தமானது பசுவிற்கு உயிர் போகும் வலியை உண்டு செய்கின்றன. ஆனால் நமக்கென்ன கவலை? என்று நாம் பாலை உறிஞ்சுகிறோம். மேலும் வேலை செய்யும் ஆட்கள் பெரும்பாலும் இயந்திரங்களை சரியாக கவனிப்பதில்லை. அவை சரியான நேரத்தில் நிறுத்தப்படுவதில்லை. அதனால் பால் வற்றிய பிறகும் கூட அவை மடியை விடாமல் உறிஞ்சுகின்றன. இது மிகவும் கொடிய வேதனையாகும். பெருபாலும் பாலுக்காக பண்ணையில் வளர்க்கப்படும் பசுக்கள் அத்தியாவசிய தேவைகள் கூட பூர்த்தியாகாத வகையில் மிகவும் குறுகிய இடங்களில் கட்டி வைக்கப்படுகின்றன. அவை பால் கொடுக்கும் இயந்திரங்கள் போல நடத்தப்படுவது வேதனை. அநேக பசுக்கள் தினந்தோறும் ஹார்மோன் (மரபணு) ஊசி மூலம் அதிகப் பால் கறக்க உந்தப்படுகின்றன. (இதன் காரணமாகவே பசுக்கள் பால் கறக்காமல் விட்டால் அவற்றின் மடி வீங்கிப் போகிறது இயல்பு நிலையில் கன்றுக்கு பால் ஊட்டிய பிறகு எந்த பாலூட்டிக்கும் மடியில் பால் தங்கி வீக்கம் ஏற்படாது.) ஆக்ஸிடாக்ஸின் (OXYTOXIN-SCHEDULE H DRUG) எனப்படும் வேதிப்பொருள் பரவலாக அனைத்து பால் பண்ணைகளிலும் உபயோகிக்கப்படுகிறது. இது சட்டவிரோதமானதும் கூட. இந்த வேதிப்பொருள் அதிகப் பால் சுரப்பதற்காக உபயோகிகப்படுகிறது. ஆனால் இது பசுக்களின் அடிவயிற்றில் பிரசவ காலத்தில் ஏற்படும் வலிக்கு சமமான வேதனையை உருவாக்குகிறது. D.A.V.Health Research foundation-ன் பிரதமரான டாக்டர். R.P.பர்ஷார் என்பவரின் ஆய்வுக்கட்டுரையில் அவர் கூறுகிறார், "உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைச் சேர்ந்த 68-83% பால் பண்ணைகள் ஆக்ஸிடாக்ஸின் ஊசியை பயன்படுத்துகின்றன. கன்று ஈன்ற பின் 6 மாதங்கள் வரை ஒரு பசு பால் சுரக்கும். ஆனால் கூடுதலாக பல மாதங்கள் செயற்கை கருத்தறிப்பு செய்யாமலே ஆக்ஸிடாக்சின் ஊசியை செலுத்துவதன் மூலம் பால் கறக்கப் படுகின்றது. இந்த ஆக்ஸிடோக்சின் என்பது கறக்கப் படும் பாலில் கலந்து வருவதால் பால் என்பது ஒரு ஆட்கொல்லி விஷமாக மாறுகிறது. தினந்தோறும் இத்தகைய பாலை உட்கொள்வதால் 55க்கும் அதிகமான வியாதிகளை நாம் உட்கொள்கிறோம் என்பது நிதர்சனமாகிறது"
இந்தியா உலகின் மிக அதிகமான பால் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளது. இதற்கு காரணம் செயற்கை கருத்தரிப்பு முறை. இம்முறையில் காளை மாட்டின் விந்தணு சேகரிக்கப்பட்டு பின் ஒரு பசுவின் இனப்பெருக்கக் குழாயினுள் செலுத்தப்படுகிறது. இது மிகவும் தேர்ந்த மருத்துவ வல்லுநர்களால் செய்யப்பட வேண்டியது. ஆனால் நம் நாட்டில் மனிதனுக்கு வைத்தியம் பார்க்கவே உண்மையான மருத்துவர்கள் குறைவு. எனவே இந்த கருத்தரிப்பு செயல்முறை உள்ளூர் ஆசாமிகளால் பாதுகாப்பற்ற முறைகளில் செய்யப்படுகிறது.1.ஊசிகள் சுத்திகரிக்கப்படுவதில்லை.
2.ஒரே ஊசி பல முறை பல மிருகங்களுக்கு இடையே உபயோகிக்கப்படுகிறது.
3.அடிப்படை சுகாதாரத் தேவைகள் மறுக்கப்படுகிறது.
4.பசுக்கள் சித்ரவதை செய்யப்படுகின்றன.
5.கட்டி வைத்து அடிக்கப் படுகின்றன.

பாரம்பரியமாக பாலுக்காக வளர்க்கப்பட்ட பசுக்கள் மற்றும் இதர கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து இயற்கையான உணவு உட்கொண்டு கலாச்சாரம் மற்றும் குடும்பத்தின் அங்கமாகவும் மதிக்கப்பட்டு, அவைகளின் உணர்ச்சிகளுக்கும் மதிப்பளிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது இந்தியப் பால் பண்ணைகளின் நிலையே வேறு. பணம் எனும் மாய வலையில் சிக்கி உழல்வது மிருகங்களோ மனிதர்களோ தனிப்பட்ட முறையில் அல்ல. மொத்த பூமியும் தான். பால் கறந்து சிறுதொழில் செய்து வந்த குடும்பங்கள் அளவில் பெரிய இயந்தர தொழிற்சாலைகளால் நசுக்கப்பட்டு விட்டன. அவை லாபநோக்கில் செயல் படும் எந்திர அரக்கர்களாகவே இருக்கின்றன. அங்கே மிருகங்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு இல்லை. மனித நலன் எந்திரத்தனமாக துரு பிடித்துப் போயிருக்கிறது. கண் முன்னே துடிக்கும் பசுக்களை பற்றி கவலை படாதவர்கள் எங்கேயோ காசு கொடுத்து பால் வாங்கும் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பற்றியா யோசிக்கப் போகிறார்கள்? அவர்களுக்கு தேவை பணம். அதை கொடுப்பவன் பாலை வாங்கினால் என்ன? நோயை வாங்கினால் அவனுக்கென்ன? பெரிய அளவில் வெளியே தெரியாத இத்தகைய உண்மைகள், மலட்டுத்தன்மை, எலும்புருக்கி நோய் போன்ற சொல்ல முடியாத வியாதிகளாய் சமூகத்தில் பரவி விட்டன. மூச்சுக் காற்று மூலமாக பரவும் நோய்களைக் காட்டிலும் எச்சில், பால் மற்றும் உடற்கழிவுகளால் பரவும் வியாதிகள் மிகவும் கொடியவை. பால் பொருட்களுக்கு பெருகியுள்ள தேவைகளால் பசுக்கள் வருடத்திற்கு இரண்டு முறை செயற்கையாக கருத்தரிக்கப் படுகின்றன. பிரசவ காலமோ 7 மாதங்கள். ஆனால் 3 மாதத்திற்கு ஒரு முறை ஊசி மூலம் உந்தப்பட்டு பால் கறக்கப்படுகிறது. இதனால் பிரசவமாக இருக்கும் பொழுதே பால் கறக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக பால் கறக்கப் படுவதால் மடியின் சுரக்கும் தன்மை நலிவடைகிறது. இதனால் வேதிப்பொருட்கள் மடியின் உட்புறம் அமைந்துள்ள திசுக்களை உடைத்து பாலுடன் சேர்த்து சுரக்கச்செய்கிறது. நாளடைவில் இது கீடாஸிஸ்(KETOSIS) எனும் வியாதியாக பசுவை தொற்றுகிறது. மேலும் பால் கறக்கும் இயந்திரங்களும், கைகளும், பசு நின்றுகொண்டிருக்கும் குறுகிய மேடைகளும் சுத்தம் செய்யப்படுவதில்லை. இதனால் மாஸ்டிடிஸ்(MASTITIS) எனும் நோய் பசுக்களை மேலும் தொய்வடையச் செய்கிறது. பசுக்கள் ஹார்மோன் ஊசிகள் மூலமாக ஆயுள் நீட்டிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் இத்தகைய பசுக்களில் 20% பசுக்கள் மாமிசத்திற்காக சட்டவிரோதமாக கடத்தப் படுகின்றன. மேலும் சில பசியினாலும் சோர்வினாலும் இறக்கின்றன.
மனித நலன் எந்திரத்தனமாக துரு பிடித்துப் போயிருக்கிறது. கண் முன்னே துடிக்கும் பசுக்களை பற்றி கவலை படாதவர்கள் எங்கேயோ காசு கொடுத்து பால் வாங்கும் மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பற்றியா யோசிக்கப் போகிறார்கள்? அவர்களுக்கு தேவை பணம். அதை கொடுப்பவன் பாலை வாங்கினால் என்ன? நோயை வாங்கினால் அவனுக்கென்ன?
இந்திய அரசின் 2003-ம் ஆண்டின் கால்நடை எண்ணிக்கை புள்ளியியல் படி இந்தியாவில் 283.1 மில்லியனன் கால்நடைகள் இருந்தன. 2007-ம் ஆண்டு 282 மில்லியன் கால்நடைகள் இருந்ததாய் அறிவிக்கப்பட்டது. 187.5 மில்லியன் பசு மற்றும் இதர கால்நடைகள், மற்றும் 97.9 மில்லியன் எருதுகள் அவற்றில் அடக்கம். ஐ.நா.வின் 2005 புள்ளிவிவரப்படி இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் இருந்தன. ஐ.நா.வின் உணவ் மற்றும் விவசாயத்துறையின் புள்ளி விவரப்படி 530,351,770 டன் பால் உலகம் முழுவதும் உட்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தியா மட்டுமே அதில் 75,270,950 டன் பாலை உட்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் 23,950,320 டன் மற்றும் வங்காளதேசம் 2,307,590 டன் பால் பொருட்களை முறையே உட்கொண்டிருக்கின்றன.
மும்பை மாநகரில் 2005-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 2500-க்கும் மேற்பட்ட எருதுகள் மற்றும் பசுக்கள் தப்பிக்க வழியின்றி கட்டப்பட்டிருந்ததால் உயிரிழந்தன. பண்ணையில் வளர்க்கப்பட்ட பசுக்கள் பல கன்றுகளை தேடி அலைந்தன. ஆனால் மக்கள் கவலைப்பட்டதோ பால் விலை ஏற்றத்திற்காக மட்டுமே. :( இது பண்ணை முறை மிருகங்கள் சந்தித்துக்கொண்டிருக்கும் அநேக கொடுமைகளுக்கு ஒரு உதாரணம். பீட்டா, நீலச்சிலுவை சங்கம் மற்றும் இதர மிருக நல அமைப்புகள் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 2000க்கும் மேற்பட்ட சட்ட விரோதமான பால் பண்ணைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றில் ஒவ்வொன்றிலும் தலா 2000-3500 கால்நடைகள் வரை அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இத்தகைய கால்நடைகள் ஒரு நாளுக்கு 14 கிலோ அளவிலான பால் கறக்கும் வகையில் வதைக்கப்பட்டிருக்கின்றன.
டெல்லி போன்ற பெருநகரங்களில் இருக்கும் பல பால் பண்ணைகள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அடிப்படை வசதி இல்லாமல் இருக்கின்றன. போதிய சுகாதார வசதிகள் இல்லை. கன்றுகள் தாயிடம் இருந்து தொலைவில் கழிவுகளுக்கு மத்தியில் கட்டிப் போடப்பட்டிருக்கின்றன. அவைகளில் பல காசநோய், தோல் வியாதி போன்றவற்றால் அவதிப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலைகளினால் நூற்றுக்கணக்கான பசுங்கன்றுகள் மரணமடைகின்றன. அவை பிறந்து 24 மணி நேரம் கூட சரியான வாழ்வை வாழ்வதில்லை. இவ்வாறு சுகாதாரமற்ற சூழ்நிலையினால் இறக்கும் பசுக்களின் பிரேதங்கள் கசாப்புக் கடைகளுக்கு அனுப்பபடுகின்றன(இது நிச்சயம் ஹலால் அல்ல). அங்கே இவற்றின் உடல் தோலுக்காக பதனிடப்படுகின்றன.
பசுக்கள் மனிதர்களைப் போலவே தனது குழந்தைகளை மிகவும் நேசிக்கும் பண்புடையது. அவை நமது அசுரத்தனமான பால் தேவைக்காக மீண்டும் மீண்டும் கருத்தரிக்கப் படுகின்றன. அவ்வாறு பிறக்கும் கன்றுகளும் மிகவும் சீக்கிரத்திலேயே தாயிடம் இருந்து பிரிக்கப் பட்டு தோல் பட்டறைக்காக தயார் செய்யப்படுகின்றன. இடைப்பட்ட காலத்தில், கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் பசுக்கள் தாயிடம் சேர்வதற்காக மிகவும் மெனக்கெடுகின்றன. இதனால் கயிற்றில் சிக்கி உயிரிழக்கவும் செய்கின்றன. இது ஒரு கொடுமையான மரணம் ஆகும். அவை கதறுவது அர்கில் வசிப்பவர்களுக்கு கேட்காமலிருக்க கன்றுகளின் வாய்கள் இறுகக் கட்டப்படுவது மேலும் கொடுமை. நமது அன்றாடத் தேவைக்கான பால் உற்பத்தியாகிக்கொண்டிருக்கும் வேளையில் பாலுக்கு சொந்தம் கொண்டாட வேண்டிய கன்றுகள் ஒருமூலையில் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கின்றன.
தோல் பட்டறை:
இவ்வாறு மரணமடையும் கன்றுகளின் பிரேதங்கள் வாரத்திற்கு ஒரு முறை ஒரு தோல் வியாபாரியிடம் மொத்தமாக ஒப்படைக்கப் படுகிறது. சில சமயங்களில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் கன்றுகளும் ஈவிரக்கமின்றி கொடிய முறையில் கடத்தப் படுகின்றது. அவ்வப்போது கன்றுகள் மாமிசத்திற்காகவும் கசாப்புக் கடைகளுக்கு அனுப்பப் படுகிறது. பெண் கன்றுகள்/பசுங்கன்றுகள் இதற்கு மேலும் கொடிய வாழ்க்கையை அனுபவிக்கின்றன. அவை தாய்ப் பசுவின் பால் சுரக்கும் வகையில் ஓரிரு நிமிடங்கள் பசுவின் அருகே நிறுத்தப்பட்டு பின் பால் சுரந்ததும் பிரிக்கப்படுகின்றன. இது ஒரு குழந்தையை தாய்ப்பால் குடிக்க விடாமல் செய்வதற்கு சமமான பாவமாகும். இவ்வாறு வளர்க்கப்பட்டு அதன் தாய்ப் பசு சந்தித்த கொடுமைகளை சந்திக்க அதன் இடத்தில் வைக்கப்படுகின்றது. இது ஒரு முடிவில்லா சுழற்சி முறையில் நடக்கிறது.
பிரபல பால் பொருட்கள் தயாரிப்பாளரான அமுல் (AMUL) நிறுவனம், வருடத்திற்கு 80,000 கன்றுகள் மரணத்திற்குத் தள்ளப் படுகின்றன என்று ஒப்புக் கொள்கிறது.
அதீதமான தேவை இருப்பதால், கலப்படம் என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

















