சைவ உணவு முறை ஆரோக்கியமானதா?
நிச்சயமாக. படியுங்கள்
.நனிசைவ உணவு வகைகள்
ஆரோக்கியமான வாழ்வின் திறவுகோல்
பரிபூரண ஆரோக்கியத்திற்கும் நிம்மதியான வாழ்விற்கும் நனிசைவ உணவுகள் சக்திவாய்ந்ததோர் திறவுகோலாக விளங்குகிறது. நனி சைவ உணவுப் பட்டியலானது, பரந்து விரிந்த பல வகை சுவைகளையும் சத்துக்களையும் கொண்டு மிளிர்கின்றது! அவை திருப்திகரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும், நாவுக்கு ருசிகரமானதுமாக பல வகை பண்டங்களை கொண்டுள்ளது.
சைவ உணவுமுறையை மேற்கொள்பவர்கள் மாமிசம் உண்பதில்லை. ஆனாலும் பால் பொருட்களை உபயோகிக்கிறார்கள்.
ஆனால், நனி சைவ உணவு முறையை மேற்கொள்பவர்கள் விலங்குகளை துன்புறுத்தி தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளையும் உண்பதில்லை உபயோகிப்பதில்லை. இதில் பால் மற்றும் பால் பொருட்கள் அடங்கும்.
சைவ உணவுமுறையில், ஒரு சில குறிப்பிடத்தக்க நன்மைகள் இருந்தாலும், நனிசைவ உணவுமுறையே அனைத்து உணவுமுறைகளிலும் சாலச்சிறந்து விளங்குகின்றது. அஃது , மனித உடல்நலத்தை பாதிக்கும் பல்வேறு வியாதிகளை குணப்படுத்த மட்டுமன்றி அத்தகைய வியாதிகள் மற்றும் நோய்கள் வராதிருக்கும் படி தடுக்கவும் செய்கிறது.
நனிசைவ உணவுமுறையின் சிறப்புகளை பார்க்கலாம்:
ஆரோக்கியமான இதயம்
கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்புச்சத்து. அளவுக்கு கொஞ்சம் மீறினாலும் உடல்நலத்தை பெரிதும் பாதிக்கும். மாமிச உணவு உண்பவர்களை விட, நனிசைவ உணவு உண்பவர்களுக்கு கொழுப்புச்சத்து மிகவும் சிறந்த கட்டுப்பாட்டில் உள்ளது. மாமிச உணவுகள் கொழுப்பை இயற்கையாகவே அதிகம் கொண்டுள்ளது. மாமிச உணவைத்தவிர்ப்பதால் நனிசைவர்கள் ஒரு ஆரோக்கியமான இதயத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
மேலும், நனிசைவ உணவுமுறையில் உள்ள, தனித்தன்மை வாய்ந்த தாவரப் புரதம் ஆரோக்கியத்தில் சிறந்த நன்மைகளை உண்டாக்க வல்லது. பலவிதமான உணவுமுறை ஆராய்ச்சிகளில் மாமிசப் புரதத்தின் சிறந்த மாற்றாக தாவரப் புரதம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தாவரப் புரதத்தின் உபயோகம் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கணிசமாகக் குறைக்கிறது. இத்தகைய சிறப்புகள் நனிசைவ உணவுமுறையை ஏனைய உணவுமுறைகளைக் காட்டிலும் சிறந்தது என்பதைத் தெளிவாகச் சொல்கின்றன.
இரத்த அழுத்தம்
1920 ஆம் ஆண்டில் இருந்து தற்காலம் வரை நடந்துள்ள எண்ணில் அடங்காத பல மருத்துவ ஆராய்ச்சிகள், நனிசைவ உணவு முறையை மேற்கொள்பவர்களின் இரத்த அழுத்தம், மாமிசம் உண்பவர்களைக் காட்டிலும் குறைவாகவும், சரியான அளவில் தொடர்வதையும் நிரூபித்துள்ளன.
சோடியம் போன்ற இரத்த அழுத்த்தை அதிகரிக்கும் நச்சுப் பொருட்கள் மாமிச உணவில் இயல்பாகவே நிறைந்த்துள்ளது. நனிசைவ உணவுமுறையை மேற்கொள்வதன் மூலம், சோடியம் உட்கொள்ளப்படுவது தடுக்கப் படுகிறது.
நீரிழிவு
Diabetes எனப்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் நனிசைவ உணவுமுறையை மேற்கொள்வதன் மூலம் விரைவான பலனை உணரலாம். சமீபகாலமாக நடந்துள்ள மருத்துவ ஆராய்ச்சிகள், இணை மாவுச்சத்து [கார்போஹைட்ரேட்] மற்றும் நார்ச்சத்து(பெரும்பாலும் தாவர உணவுகளில் மட்டுமே இருக்கும்) போன்ற நீரிழிவைக் கட்டுப்படுத்தும் முக்கிய சத்துக்கள் மிகுந்தும், கொழுப்பு குறைந்தும் காணப்படும் நனிசைவ உணவுமுறையே நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கு சிறந்த பரிந்துரை எனக்கூறுகிறது.
நனிசைவ உணவுமுறை நீரிழிவை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல் சமயங்களில் செயற்கை மருத்துவத்தின் தேவையையே குறைத்துவிடுகிறது. நீரிழிவினால் அவதிப்படும் நபர்கள் இதய நோய்களினின்றும் காத்துக்கொள்ள கொழுப்பு குறைந்த நனிசைவ உணவு முறையை மேற்கொள்ளலாம்.
புற்று நோய் தடுப்பு
நனிசைவ உணவுமுறை புற்றுநோயை தடுக்கவும் உதவுகிறது. மேலும் புற்றுநோயால் மரணம் அடையும் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை இதர புற்றுநோய் மரணங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு குறைவாக உள்ளது என ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மார்பகப்புற்று நோய் தாக்கும் அபாயம் மாமிசம் உண்ணும் பெண்களை விட நனிசைவ உணவு உண்ணும் பெண்களுக்கு மிகவும் குறைவாகவே உள்ளது.
நனிசைவ உணவுமுறை எவ்வாறு புற்றுநோயை தடுக்கிறது?
முதல் காரணம், நனிசைவ உணவுகளில் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது.
இரண்டாவது, புற்றுநோயைத் தடுக்கும் ஃபைடோ இரசாயனங்கள் (PHYTOCHEMICALS) தாவர உணவுகளில் இயல்பாகவே மிகுந்து காணப்படுகிறது.
உதாரணமாக, நனிசைவர்கள் பீட்டா கரோட்டீன் மற்றும் லைகோபீன் (BETA- CAROTENE AND LYCOPENE) போன்ற தாவர நிறமிகளை பெரும்பாலும் உட்கொள்கிறார்கள். இவை, கல்லீரல், சுவாசக்குழாய் மற்றும் இதயக்குழாயை தாக்கும் புற்று நோய் தாக்கும் அபாயத்தை குறைத்து அவர்களது ஆரோக்கியத்தை விளக்கும்.
மேலும், நனிசைவ உணவுமுறை புற்றுநோயை தடுக்கும் விந்தையின் சில காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை. உதாரணமாக, நனிசைவர்களது இரத்தத்தில் இயல்பாகவே வெள்ளை அணுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகின்றன. அவை, மாமிச உணவு உட்கொள்பவர்களின் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைக் காட்டிலும் அதிக வீரியமுடையதாய் இருக்கின்றன. இந்த வெள்ளை அணுக்களே நமது இரத்த்தின் போர்வீர்ர்கள். நோய் எதிர்ப்பு சக்தியை காட்டுவது இவைகள் தான்.
சுண்ணாம்புச் சத்து
நனிசைவர்கள், சிறுநீரகத்தில் கல் உருவாகும் அபாயத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறார்கள். மேலும், மாமிசப் புரதம் இல்லாத்தௌணவு முறை ஆதலால், எலும்பு முறிவு, முழங்கால் மூட்டு தேய்மானம் போன்ற அபாயங்களில் இருந்தும் இவர்கள் காக்கப்படுகின்றனர்.
அதிகமான மாமிச உணவு, எலும்புகளுக்குச் செல்லும் சுண்ணாம்புச்சத்தை முற்றிலும் தடுத்து விடுகின்றன. ஆதலால், உட்கொள்ளும் சுண்ணம்புச்சத்து குறைவாக இருந்தாலும், அவை இழப்பது தடுக்கப்படுவதால், தாவர உணவுகள் மிகவும் ஆரோக்கியமானதாக விளங்குகிறது.
பால் உணவுகளை தவிர்ப்பதால் ஏற்படும் சுண்ணாம்புச்சத்துக் குறைபாடை நனிசைவ உணவுமுறையில் உள்ள வேறு பதார்த்தங்கள் தீர்த்துவிடுகின்றன.