(He) kills me, for your waist
kills me,
can't you feel my pain,
can't you just abstain
can't you see me cry,
can't you see me die,
The selfishness in your eyes.
kills me,
open your eyes…
Have you felt the pain Lately!?
மாற்றங்களை விதைத்து விட்டு நாம் அறுவடை செய்யக் காத்திருக்கும்போது சிலர் எதிர்காலத்தில் ஏற்கெனவே வாழ்ந்து விட்டு வந்தது போல கேள்விகள் கேட்பார்கள்.இன்னும் நூறு வருடம் கழித்து ஆவின் கம்பெனி இருக்குமா?
ஒருவேளை நான் நனிசைவ உணவு முறைக்கு மாறிவிட்டால் (மாறும் எண்ணமில்லை ) என் மனைவியும் மாறி விட்டால், எதிர்காலத்தில் எங்களுக்கு பிறக்கும் குழந்தையும் நனிசைவ உணவு முறையில் வளர்க்க நினைத்தால் (வாயில் வடை சுடுவது என்பார்களே, அதான் இது) அப்போது என் மனைவிக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால், நான் மருத்துவரிடம் போனால், அவர் குழந்தைக்கு பசும்பால் கொடுக்க அறிவுறுத்தினால் நான் என்ன செய்வேன். (அவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது இது தான் தொலை நோக்குப் பார்வை என்பது )
அறிக, தாய்ப்பால் மட்டுமே குழந்தைக்கு முதல் தர ஊட்டச்சத்தை தர வல்லது. தாய்ப்பாலுக்கு நிகர் எதுவும் இல்லை, பசும் பால் வெறும் சப்பைக் கட்டு மட்டுமே. தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்து தேவை அறிந்து சுரப்பதே தாய்ப்பால். கீழே கொடுக்கப்பட்டுள்ள மாற்றுவழிகள் தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலை முற்றிலும் ஏற்படும் போது மட்டுமே பின்பற்றப்ப்பட வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கின்றது. மேலும் மாற்று வழி முறைகள் அனைத்தும் நனிசைவ உணவு முறையை சார்ந்ததே. விதண்டாவாதம் பேசுவதற்கு இது பதில் அல்ல!
இது போன்ற தடுமாற்றங்கள் பலரது வாழ்வில் வருவது இயல்பே! இதில் இவர் போன்ற தீர்க்கமானவர்களும் தடுமாறி விடுகிறார்கள் என்பது கசப்பான உண்மை! போலிகள் பெருகிப்போனது மையக்காரணம். ஆனால், இந்த தடுமாற்றத்திலும் ஒரு நல்ல விஷயம், புலான் மறுத்தல் பால் மறுத்தல் போன்ற ஆசாரங்களை இவர் சில காலம் கடைபிடித்திருக்கிறார். இங்கே இவர் ஒரு நல்ல வழக்கத்தை ஒரு முரணான குறிக்கோளுடன் ஏற்படுத்தியிருக்கிறார், என்பதை கவனிக்க வேண்டும்.
A Right Habit with a Wrong Attitude.
ஞானியின் தரிசனத்திற்காகவும், நிம்மதிக்காகவும், வீட்டை விரிவு படுத்த வேண்டியும், இவ்வழக்கத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார். குறிக்கோள்கள் பூர்த்தியாகாத பட்சத்தில் விரக்தியின் காரணமாக ஒரு நல்ல வழக்கத்தை கைவிட்டிருக்கிறார். இடைப்பட்ட நேரத்தில் அசைவம் உண்டால் மட்டுமே தெம்பாக வேலை செய்ய முடியும் இல்லையேல் சோர்ந்து விடுவோம், என்ற சுய படிப்பினையை கற்றுக் கொண்டு அசைவம் சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்.
முதல் விஷயத்துக்கு வருவோம். அறிவுரைகளே இந்த உலகில் இலவசமாகவும் அதிகமாகவும் கிடைக்கும் பொருளாகும். ஆனால், அதை ஒருவன் இலவசமாக அளிக்கும் போது மனம் அதை ஏற்க மறுக்கிறது. உதாரணத்திற்கு என்னையே சொல்லலாம். நான் அசைவம் சாப்பிடுவது அனாவசியம், ஆரோக்கியத்திற்கு கேடு என்று சொல்வதால் எனக்கு பணம் கிடைக்காது. ஆனாலும் அந்த ஆலோசனையை நான் தவறாமல் அனைவருக்கும் வழங்கி விடுவேன், இலவசமாக. யாரும் கவனிக்க மாட்டார்கள். ஆனால், ஒரு மருத்துவமனையில் பல்வேறு சோதனைகள் செய்து, பல ஆயிரங்கள் செலவு செய்தபின், கணிசமாக ஒரு தொகையை வாங்கிகக் கொண்டு மருத்துவர் சொல்வார், தண்ணீர் அதிகம் குடியுங்கள், உப்பு சேர்க்க வேண்டாம், சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளுங்கள், அசைவம் கூடவே கூடாது. முட்டை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்(இது ஆறுதலுக்காக) ஆனால் மஞ்சள் கரு சேர்க்கக வேண்டாம், சுவையான உணவையே நினைத்துப பார்க்க முடியாதவாறு இன்னும் ஏதேதோ! ஆனால், மிருக வதை செய்து வரும் எந்த பொருட்களையும் சேர்க்காதீர்கள், ருசியாகவும் ஆரோக்கியமாகவும் உணவு உண்ணுங்கள், சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்த்து கொள்ளுங்கள் என ஆரோக்கியமாக வாழ நான் இலவசமாக கூறும் ஆலோசனையை ஒருவரும் ஏற்க மாட்டார்கள் . காசு கொடுத்து வாங்கிய டாக்டரின் ஆலோசனைகள் பத்தியம் தவறாமல் கடைபிடிக்கப்படும். இது போலத்தான் சாமியார் மடங்களும் அங்கே கொடுக்கப்படும் ஆலோசனைகளும். வாங்கிய காசுக்கு ஏதேனும் நல்லதை சொல்ல வேண்டுமே என்று நாங்கள் இலவசமாக சொல்வதையே அவர்கள் சற்று தத்துவார்த்தமாக சொல்வார்கள். இதையெல்லாம் செய்தால் பகவான் உங்கள் முன் தோன்றுவார், வேண்டிய வரம் கிடைக்கும் என்று பூசி மெழுகுவார்கள். நாமும் Fact-u fact-u fact-u என்று ஆமோதிப்போம். ஆனால் நிதர்சனமான உண்மை என்னவென்றால் இத்தகைய வழக்கங்களை பின்பற்றுவதனால் பகவன் தரிசனமோ, வரமோ கிடைக்காது... மாறாக ஆரோக்கியமான உடல், அமைதியான மனம், மற்றும் புண்ணியமும் கிடைக்கும். வேறென்ன வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு,
Don't Blame Others for disappointing you, but blame yourself for expecting too much!
என்று. அதிகம் எதிர்பார்ப்பதே தவறு, என்பது இதன் அர்த்தம். எனவே ஒரு நல்ல வழக்கத்தை கடைபிடிக்கும் போது அதிகம் எதிர்பார்க்காமல், நிதர்சனத்தையே எதிர்பார்த்தால் பலன் நமக்கு சாதகமாக இருக்கும். அதே போல பணத்துக்காக கிடைக்கும் எந்தவொரு அறிவுரையும் ஆலோசனையும் நன்மைக்காக இராது.