அதிர்ச்சியான விபரங்க-ரீஃபைண்ட் ஆயில்.

அதிர்ச்சியான
விபரங்க.

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில்
ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்.,
நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்தனர்.
இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும்., நிறமாகவும்.,
மணமாகவும் இருக்கும்.இதற்கு காரணம் அந்த
எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள் தான்.

இதனால் தான் உடல் ஆரோக்கியத்திற்க்கு
தேவையான புரோட்டீன்கள், வைட்டமின்கள்,
தாதுப்பொருள்கள், நார்ச்சத்துக்கள் , குளோரோபில்,
கால்சியம், மெக்னீசியம்,காப்பர், இரும்பு, பாஸ்பரஸ்,
வைட்டமின் " இ " போன்றவை நமக்கு கிடைத்து வந்தன..

இந்த தாதுப்பொருட்கள் மூலம் உற்பத்தியாகும்
மெழுகு போன்ற பொருள்கள் மூட்டுகளுக்கு
சென்று., எலும்பு தேய்மானத்தை தடுத்தன.



இதை உணவுக்கு மட்டுமின்றி. குளியலுக்கும்,
மசாஜ் செய்வதற்க்கும் உபயோகித்த காரணத்தால்
அவர்கள் 80 வயது வரை மூட்டுவலியின்றி
கால்நடையாகவே சென்று வந்தனர்.

அதனால் தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள்
இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக
" நல்ல எண்ணெய் " என்று சொன்னார்கள்.
வெளிநாட்டில் கூட இதை " Queen of Oil " என்று
அழைக்கிறர்கள்.

ஆனால் இன்று நாம் உபயோகிக்கும்
ரீஃபைண்ட் ஆயிலில் உயிர்சத்துக்கள்
எதுவுமே இல்லை என்பது அதிர்ச்சியான
உண்மை.

சரி., ரீஃபைண்ட் ஆயில் எப்படி
தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போமா..

மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில்
காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க
வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு
எடுக்கிறார்கள்.

பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின்
மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து
அதில் இருக்கும் வாசனையை அறவே
நீக்கிவிடுகிறார்கள்.

பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன்
மூலம் பிரித்து எடுக்கிறார்கள்.

இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில்
பலருக்கு சாப்பிடவே பிடிக்காது.

திரைமறைவில் நடக்கும் இந்தவேலைகள்
எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால்
" சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று
நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து
கொண்டு இருக்கிறார்கள்.

உண்மையில் ரீஃபைண்ட் ஆயில்என்பது
அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம்.

சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது
சூடு தாங்காமல் உருக்குலைந்து
உடல் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும்
ஒரு ரசாயன கலவையாக மாறுகிறது.

செக்கில் ஆட்டி எடுக்கப்படும் இயற்க்கையான
எண்ணெய்யை சூடுப்படுத்தினால்... அது
ரசாயன கலவையாக மாறாது. அதன்
தாதுப் பொருள்கள் அப்படியேசிதையாமல்
நமக்கு கிடைக்கும்.

எண்ணெய் விஷமாக மாறிவிட்டதால்
இன்று மக்கள் பலவிதமான் நோய்களுக்கு
உள்ளாகி சிகிச்சைகள் எடுத்து கொள்வதற்க்காக
பெரிய தொகைகளை செலவளித்து கொண்டு
இருக்கிறார்கள்.

ரசாயன பொருட்களால் பாழ்படுத்தப்பட்டு.,
உடல் ஆரோக்கியத்திற்க்கு அவசியமான
பொருட்கள் நீக்கப்பட்ட ஒருதிரவத்தை
ரீஃபைண்ட் ஆயில் என்ற பெயரில் விற்பனை
செய்ய அரசாங்கமும்., மெடிக்கல் கவுன்சில்களும்
எப்படி அனுமதி அளிக்கின்றன...??

நாமும் யோசிக்கும் சக்தியைஏன் இழந்து
விட்டோம்.?

நமக்கு வரும் நோய்களுக்கு எல்லாம்
சுற்றுசூழல் மாசுப்பட்டு இருப்பதினால்
மட்டும் தான்
தான்
காரணம் என்று சொல்லி நம்மை நாமே
ஏமாற்றி கொள்கிறோம்.

கடந்த 60-70 ஆண்டுகளில் நோய்கள் முன்பு
எப்போதும் இல்லாத அளவுக்குமக்களை
வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது.
இதற்க்கான காரணங்களில் முக்கியமான
இடத்தை பிடித்து இருப்படி ரீஃபைண்ட் ஆயில்.

வாழைப்பழம் - உணவு கட்டுபாட்டின் பொக்கிஷம்


வாழைப்பழம் - நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும்..., எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம்தானே! என்று எண்ணிவிடாதீர்கள். அவற்றை சற்று அன்போடு, ஆர்வத்தோடு பாருங்கள். அதன் வடிவமைப்பு எவ்வளவு அழகாக இருக்கிறது. வாழைப்பழங்கள் பல நூறு வகைகள் இருந்தாலும் சாதாரணமாக கிடைக்கும் வாழைப்பழத்தின் நன்மையைப் பற்றி சற்று தெரிந்துக் கொள்வோம். இந்த கட்டுரையை படித்த பின்பு வாழைப்பழத்தை நீங்கள் பார்க்கும் விதம் முழுவதுமாக மாறியிருக்கும். இதற்கு பின்பு வாழைப்பழத்தை வாங்கி அதை நாளைக்குச் சாப்பிடலாம் என்று உங்கள் வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் சிறை வைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power):
மிடில் செக்ஸ் (Middle Sex)ல் உள்ள டிவிக்கென்ஹாம் (Twickenham) கல்வி நிலையத்தில் இவ்வருடம் 200 மாணவர்களுக்கு காலை, இடைவெளி மற்றும் மதிய உணவில் வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது அவர்களது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
மலச்சிக்கல் (Constipation):
ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.
மந்தம் (Hangovers):
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.
நெஞ்செரிப்பு (Heart Burn):
உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டு பறந்துவிடும்.
உடற்பருமன் (Over Weight):
ஆஸ்திரியா (Austria)வில் உள்ள மனோதத்துவ நிறுவனத்திலுள்ள (Institute of Psychology) ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
குடற்புண் (Ulcers):
வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.
சீரான வெப்பநிலை (Temperature Control):
வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.
காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):
வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.
புகைப்பிடிப்பது (Smoking):
புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.
மன அழுத்தம் (Stress):
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.
காலைத் தூக்கம் (Morning Sickness):
மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.
நரம்பு நாளங்கள் (Nerve System):
இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.
அழுத்தக் குறைவு (Depression):
‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.
இரத்த சோகை (Anemia):
வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.
இரத்த அழுத்தம் (Blood Pressure):
குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிமென்று அமெரிக்க அரசு உணவு நிறுவனம் கூறுவதோடு அதிக வாழை மரங்களை சாகுபடி செய்யவும் உத்தரவிட்டுள்ளது.


The new England Journal of Medicines ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது. இவ்வளவு நன்மைகளை சுமந்து நிற்கும் வாழைப்பழத்தை பாதுகாக்கும். அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்டதால் தன்னால் இயன்ற உதவியை மனிதனுக்கு செய்ய மறக்கவில்லை. ”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.
கொசுக்கடிக்கு மருந்து தேவையா?
வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.
வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.
எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த நம் இறைவனுக்கே எல்லாப் புகழும்.
வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலில் கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.

இந்த இடுகையை பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்டவர்

-சண்முகம் இராமசாமி

நனிசைவம்: விடுதியாளர்களுக்கான குறிப்புகள்_FOR HOSTELLERS

இந்த இடுகையின் ஆசிரியர்
அருண்,
முன்னாள் ஆராய்ச்சி மாணவர், Indian Institute of Science,சமபாவா அமைப்பின் பொருளாளர் (http://www.samabhava.org)



'த்துணையும் பேதமுறாது...' எனத் துவங்கும் வள்ளலாரின் பாடல், தமிழ் மொழியில் என்னை மிகவும் கவர்ந்த பாடல்களுள் ஒன்று. ஆறாம் வகுப்பில் இறை வணக்கத்திற்காகத் தமிழ்ப் பாடத்தில் கற்ற இப்பாடலில், வள்ளலார், இறைவன் உறைவிடத்தை, இனிய, எளிய தமிழில் தெளிவாகக் காண்பிக்கிறார். இப்பாடலை எப்போது படித்தாலும் என் மெய் சிலிர்த்து, கண்களில் நீர் பெருகும்.

பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தும் மனிதம், உலகெங்கும் தோன்றிய அதிசிறந்த சிந்தனையாளர்களால் அறிவுறுத்தப்பட்டாலும் (உ.ம். லியோ டால்ஸ்ட்டாய், ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன், பெர்னார்ட் ஷா, ரொமெய்ன் ரோலாண்ட், ...), நம் நாட்டின் சான்றோர்களின் பங்களிப்பு தனித்துவமான சிறப்பு மிக்கது. கொல்லாமைக்கும் ஊன் உண்ணாமைக்கும் அதிகாரங்கள் வகுத்த வள்ளுவர், அன்பும் இறையும் ஒன்றென உணர்த்திய திருமூலர், கருணையை அடிப்படையாகக் கொண்ட வாழ்வியலைத் தோற்றுவித்த மகாவீரர், வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார், காக்கைகளையும் குருவிகளையும் தமக்கு ஒப்பாகப் போற்றிய பாரதி, சிறு புழுவிடத்தும் தமது சகோதரத்துவத்தைக் கொண்டாடிய மகாத்மா காந்தியடிகள், என மேலோர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவர்கள், தமது எழுத்துக்களாலும், வாழ்வு முறையாலும் எண்ணற்றவர்களைத் தம் காலங்கள் கடந்தும் ஈர்க்கின்றனர்.

ஒரு நாட்டின் மாண்பையும், நேர்மையின் முன்னேற்றத்தையும் அந்நாட்டில் விலங்குகள் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதைக் கொண்டு மதிப்பிடலாம் என்கிறார் காந்தியடிகள். இதன் அடிப்படையில் நோக்குகையில் இன்று இந்தியாவும், குறிப்பாகத் தமிழகமும் மிகவும் இழிவான நிலையிலுள்ளன [1]. பசுக்கள், காளைகள், கன்றுகள், எருமைகள், கோழிகள், பன்றிகள், ஆடுகள் போன்ற விலங்குகள் மாமிசத்திற்காகவும்  பாலுக்காகவும், விவரிக்க முடியாத வன்கொடுமைகளுக்குத் தமது வாழ்நாட்களில் ஆட்படுத்தப்படுகின்றனர் [3,4]. நரகத்தை எவறேனும் காண வேண்டுமெனில், இவர்களை வளர்க்கும் அரக்கப் பண்ணைகளுக்குச் செல்லலாம். நரகத்திலிருந்து விடுதலையளிக்கும் மரணமும் இவர்களுக்கு நீண்ட வேதனைக்குப் பின்னே தான் கிடைக்கிறது.

மாமிசமும் பாலும் மனிதர்களுக்குத் தேவையா?
ஆனால், மாமிசமும் பிற விலங்குகளின் பாலும் மனிதர்களின் உடல் நலத்திற்கு சற்றும் தேவையற்றன (வேறு எந்த விலங்கும், வளர்ந்தபின் இயற்கையாகப் பாலைப் பருகுவதில்லை; அதுவும் வேறு இனத்தைச் (species) சார்ந்த விலங்குகளின் பாலை!); மேலும், இவற்றை உட்கொள்வதால், மனிதர்களை நீரழிவு, இதய, புற்று நோய் போன்றவை தாக்கும் வாய்ப்பு அதிகமாகின்றது என்பது, பல்வேறு ஆய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது [7]. American Dietetic Association, சைவ உணவைப் பற்றிய தனது நிலைப்பாட்டில் [5], பால் உள்ளிட்ட விலங்குகள் மூலம் கிடைக்கப் பெறும் உணவுப் பொருட்கள், ஒரு மனிதனுடைய எந்தப் பருவத்திலும் தேவையற்றது எனத் தெளிவாக விளக்கியுள்ளது; மேலும் விலங்குகளாலான உணவுப் பொருட்களைத் தவிர்த்தல், பல்வேறு நோய்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க உதவுகிறதெனவும் தெரிவித்துள்ளது.

முடிந்த மட்டிலும் பிற உயிர்களைத் துன்புறுத்தாது வாழ விழையும் வாழ்வு முறையை நனிசைவ வாழ்வுமுறை என்பர் [2]; இது ஆங்கிலத்தில் veganism [11] என்று வழங்கப்படுகிறது. நனிசைவர், மாமிசம், விலங்குகளின் பால், போன்றவற்றையும், விலங்குகளின் தோல், பட்டு போன்றவற்றாலான பொருட்களையும், விலங்குகளின் மீது சோதித்துப் பார்த்த பொருட்களையும் முடிந்த மட்டிலும் தவிர்ப்பர். எனினும், சோயா, கோதுமை போன்றவற்றால் செய்யப்படும் 'மாமிச' உணவுப்பொருட்கள் [8], சோயா, முந்திரி, பாதாம், நிலக்கடலை, ஓட்ஸ், தேங்காய் போன்றவற்றாலான பால், தயிர், வெண்ணெய், போன்றவற்றையும், செயற்கைப் பட்டு, தோல் ஆகியவற்றையும், விலங்குகளின் மீது சோதிக்கப்படாத பொருட்களையும் விரும்பினால் பயன்படுத்துவர். நனிசைவ உணவு முறையப் பற்றி மேலும் அறிய www.pcrm.org என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.

விடுதியில் தங்கும் நம் மாணவர்களுக்கு, குறிப்பாக, நனிசைவ வாழ்வு முறையை முதன்முதலாகப் பின்பற்ற விழைபவர்க்கு, என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வாருங்கள், நிலக்கடலை தயிர் செய்யலாம்! (மூலம்: http://sharan-india.org)
1. 50 கிராம் பச்சை நிலக்கடலையை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. கடலை ஊறியபின் நீரை வடித்து, ஒரு முறை தண்ணீரில் கழுவி, முதலில் நீரின்றி அரைக்கவும்.
3. பின்னர் 200 கிராம் தண்ணீர் விட்டு மை போன்று நன்கு அரைக்கவும்.
4. கலவையை வடிகட்டியில் வடித்து, பால் எடுத்து, சூடாக்கி 3-4 முறை பொங்க விடவும்.
5. பாலை ஆறவிட்டு, விரல் பொறுக்கும் சூடு வந்தபின், 5-10 ml starter culture சேர்த்து மூடி வைக்கவும்.
6. 8 மணி நேரம் ஆனபின் கடலைத் தயிர் தயார் (குளிர் காலத்தில் ஓரிரு மணி நேரம் அதிகமாகலாம்).
7. கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து, வெள்ளரி, உப்பு ஆகியவற்றுடன் தயிருக்குள் கலக்கவும்.

Starter Culture
1. கைப்பிடி அளவு முழு கோதுமையை கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்.
2. 24 மணி நேரம் கழிந்தபின், தண்ணீர் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறி, சற்றே புளித்த மணம் வருகிறதா என சோதிக்கவும். அவ்வாறு மாறினால், starter culture தயார்.
3. இல்லையேல், 12 மணி நேரத்திற்கு ஒருமுறை சோதிக்கவும். குளிர் காலங்களிலும், தட்பவெப்பம் குறைவாக இருந்தாலும் ஒரு நாளுக்கும் மேல் தேவைப்படலாம்.
4. விலங்கு அல்லது தாவர (நிலக்கடலை, சோயா, ஓட்ஸ், முந்திரி, பாதாம்) தயிரையும் starter culture-ஆகப் பயன்படுத்தலாம்.

Table 1: 100 கிராம் உணவுப்பொருட்களில் கால்சியத்தின் அளவு
(தகவல் மூல ஏடு: ' Nutritive Value of Indian Foods'  from National Institute of Nutrition, Hyderabad)

உணவு                                        கால்சியம் அளவு (மில்லி கிராம்)}
மாட்டுப்பால்                                           120
கேழ்வரகு                                                344
கொண்டக்கடலை                                 202
பச்சைப்பயிர்                                           124
உளுத்தம்பருப் பு                                    154
கொள்ளு                                                   287
ராஜ்மா                                                       260
அகத்திக்கீரை                                          1130
வெற்றிலை                                              230
கறிவேப்பிலை                                        830
கொத்துமல்லி                                         184
முருங்கைக்கீரை                                   440
வெந்தயக்கீரை                                       395
மணத்தக்காளிக்கீரை                           410
பொன்னாங்கண்ணி                              510
பலாக்கொட்டை                                    133
கொத்தவரை                                           130
பாதாம்பருப்பு                                          230
எள்                                                             1470

உணவு விடுதியில் எவற்றை உண்ணலாம்?
தானியங்கள் (கோதுமை, அரிசி, கேழ்வரகு, ஜோவர், ...), பருப்புகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை, அனைத்து  விடுதிகளிலும் (A, B, C) பல்வேறு வடிவங்களில் கொடுக்கப்படுகின்றன; இவற்றை நாம் விரும்பிய வரையில்  உட்கொள்ளலாம். இவற்றோடு, ஒரு விட்டமின் B12 மாத்திரை (eg. Nurokind Sublingual Tablets, Methyl Cobal Tablets) அல்லது B12 அடங்கிய tonic-ஐ (eg. Cobadex B-Complex Syrup) தினமும் உட்கொள்ளுதல் நலம். புரதங்கள் பருப்புகளில் அதிக அளவில் உள்ளன. பருப்பு வகைகளையும், தானியங்களையும் உட்கொண்டால் புரதச் சத்துக் குறைபாடே நேராது. சுண்ணாம்புச் சத்து, விலங்குப் பாலில் மட்டுமே உள்ளவாறு பால் நிறுவனங்கள் விளம்பரப்படுத்தினாலும் பருப்பு வகைகளிலும் கீரைகளிலும் சுண்ணாம்புச் சத்து பாலைக்காட்டிலும் அதிக அளவில் குவிந்துள்ளது (Table 1). உணவு விடுதிகளில் அளிக்கப்படும் அனைத்து இனிப்புகளிலும் விலங்குகளின் பாலை ஏதாவது ஒரு வடிவில் சேர்ப்பதால் (மிகச் சில விதிவிலக்குகள் மட்டும்) அவற்றைத் தவிர்ப்பது நலம்.

அறையில் செய்யக்கூடிய உணவுவகைகள்:
தினந்தோறும் சிறிய அளவில் (10 கிராம் அளவில்) எண்ணெய் வித்துக்களையும் (எள், முந்திரி, நிலக்கடலை, பாதாம், ...) உட்கொள்ளுதல் நலம். எண்ணெய் வித்துக்களப் பச்சையாக, 8 மணி நேரம் ஊற வைத்து, நீர் வடித்து ஒருமுறை கழுவி வெல்லம் சேர்த்து உண்ணலாம். பச்சைப் பயறு, கொண்டக்கடலை ஆகியவற்றை முளைக்கட்டி  பச்சையாகவோ உலர் திராட்சை, வெல்லம் சேர்த்தோ, அல்லது எலுமிச்சை, உப்பு, பச்சை மிளகாய், வெள்ளரி ஆகியவற்றைச் சேர்த்தும் உண்ணலாம். இவற்றில் புரதச் சத்து மிக அதிக அளவில் உள்ளது. மேலும் முளைக் கட்டிய பயறு வகைகளில் பல்வேறு விட்டமின்கள் குவிந்துள்ளன.

பயறுகளை முளைக் கட்ட, ஓரிரு கைப்பிடி பயறை இருமுறை நன்கு கழுவி, அவை நன்றாக மூழ்கும் அளவிற்கு நீரூற்றி 8 மணி நேரம் ஊற வைக்கவும்; பிறகு, நீரைக் கொட்டி, ஊறிய பயறை ஒரு முறை நன்கு கழுவி, நீரை வடிக்கவும். 12 மணிக்கு ஒருமுறை பயறைக் கழுவி, நீரை வடிக்க வேண்டும். விரும்பிய அளவிற்கு முளை வந்தபின் உண்ணலாம். பயறு இருக்கும் பாத்திரத்தை, சிறிதளவு மட்டும் காற்றோட்டம் வரும் அளவிற்கு இடைவெளி விட்டு மூடி விடவும். பச்சைப் பயறு ஒரே நாளிலும், கொண்டக் கடலை 1.5-2 நாட்களிலும் முளை வரும்.

அவல் அல்லது ஓட்ஸைத் தண்ணீரில் ஊற வைத்து, தேங்காய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றைக் கலந்துண்டால் வேறு இனிப்பே தேவையில்லை. கருப்பு பேரிச்சம் பழத்துள் பாதாம் அல்லது முந்திரியை வைத்தால் சத்தும் சுவையும் கூடிய இனிப்பு ஆயிற்று. இவற்றைத் தயாரிக்க அடுப்பு தேவையில்லை. தேங்காய்த் துருவி, வெற்றிலை, பாக்கு கொட்டும் கல் (ஏலக்காய் பொடிக்க - மல்லேஸ்வரம் 11-வது குறுக்கு வீதியில் கிடைக்கும்), கத்தி போன்றவை போதும்.

இந்தியாவைப் போல் இயற்கையால் அருளப்பட்ட நாடு இவ்வுலகில் வேறு எதுவும் இல்லையெனலாம் -   தெய்வீக சுவை கொண்ட பலா, பழங்களின் அரசனான மாம்பழம், உண்ண உண்ணத் திகட்டாத பப்பாளி, அனைவரும் விரும்பும் வாழை, இளமை கூட்டும் கொய்யா, மற்றும் நெல்லி, சப்போட்டா, திராட்சை, தர்பூசணி, அன்னாசி  முலாம்பழம் மற்றும் பல்வேறு பழவகைகள் வெவ்வேறு காலங்களில் நம் நாட்டில் விளைகின்றன. இவை  நம்மருகிலுள்ள யஷ்வந்த்பூர் மற்றும் மல்லேஸ்வரம் பகுதிகளில் கிடைக்கின்றன.பருவ காலத்திற்கேற்ற  கனிகளை சுவைக்க, சமைக்கத் தெரிந்திருக்க வேண்டியதில்லை.


வெளியில் கிடைக்கும் நனிசைவ உணவுப் பொருட்கள்:
இந்தியாவில் நனிசைவ வாழ்வுமுறையப் பின்பற்றுதல் மிகமிக எளிது. பல சைவ உணவு விடுதிகளில், விலங்குகளின் பாலால் செய்யப்பட்ட பொருட்களை மட்டும் தவிர்க்கும்படி ஊழியியர்களிடம் வேண்டுகோள் விடுத்தால் போதும். [6] தளத்தில் நனிசைவ இனிப்புகளின் பட்டியல் உள்ளது. காந்தி இனிப்புகளில் (Kanti Sweets), சில நனிசைவ இனிப்புகள் உள்ளன (அத்தி, பேரிச்சை பருப்பி, பூசணி பேதா, சில வகை லட்டுகள், ஜிலேபிகள் போன்றவை). Mama Mia, Baskin Robbins போன்ற கடைகளில் நனிசைவ பனிக்கூழ் கிடைக்கும். [9] தளத்தில் நனிசைவருக்கேற்ற உணவகங்கள், உணவுப்பொருட்கள் உட்பட்ட பயனுள்ள தகவல்கள் உள்ளன. Bionutrients என்னும் நிறுவனம் [10], சோயா பால் பொடியை குறைந்த விலையில் விற்கிறது. இப்பொடியைக் கொண்டு நாம் சோயா தயிர் செய்யலாம்.

பிற நனிசைவப் பொருட்கள்:
செயற்கைப் பட்டு, செயற்கைத் தோல் ஆகியன தற்போது பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன (உ.ம். பாட்டா (Bata) கடைகளில் செயற்கைத் தோல் காலணிகள் கிடைக்கின்றன). விக்கோ வஜ்ரதந்தி, நம்பூதிரி ஆகிய பற்பசைகள் நனிசைவருக்கேற்றன (நனிசைவருக்கு - குறிப்பாக, பெரும்பாலும் தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை மட்டும் உண்ணும் நனிசைவருக்கு - பற்பசைகள் தேவையில்லை; உப்பு மட்டுமே போதுமானது. தாவரங்களை மட்டும் உண்டால் செரிமானம் நன்கு அமையும், எனவே வாசனை பொருட்கள் கலந்த பற்பசைகள் தேவையில்லை). Himalaya நிறுவனத்தின் சில shampoos ('No Animal Testing' என முத்திரையிடப்பட்டிருக்கும்), மீரா சீவக்காய்ப் பொடி, அரப்பு, Medimix, Classic Cinthol, Chandrika Soap, Mysore Sandal Soap (Classic) ஆகியன விலங்குகளின் மீது சோதிக்கப்பட்டதில்லை; மேலும் அவற்றில் விலங்குகளின் உடல் பாகங்களும் இல்லை.

நனிசைவ விருந்தை சுவைக்க விருப்பமா?
பெங்களூரிலுள்ள நனிசைவர்கள், மாதம் ஒரு முறை கூடி தாம் செய்த, அல்லது வெளியில் வாங்கிய நனிசைவ உணவுப் பொருட்களையும், தம்முடைய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்களில் பலர், அயல் நாடுகளிலிருந்து வந்தவர்கள். எனவே இச்சந்திப்பில் விதவிதமான சுவைமிக்க உணவுப்பொருட்கள் (cakes, chocolates, பாயசம், பிற இனிப்புகள், தாவரத் தயிர், தாவரப் பால், bread, மற்றும் நமக்குப் பழக்கப்பட்ட உணவுப்பொருட்கள்) பகிர்ந்து கொள்ளப் படுகின்றன. இச்சந்திப்பில் பங்கு கொண்டு, நனிசைவ உணவுப் பொருட்களை சுவைக்க arun.rangasamy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.


By, 
அருண், முன்னாள் ஆராய்ச்சி மாணவன், Indian Institute of Science,சமபாவா (http://www.samabhava.org) அமைப்பின் பொருளாளன்

References:
[1] http://mofpi.nic.in/ContentPage.aspx?CategoryId=162

[2] http://tamilvegan.blogspot.com

[3] http://link.brightcove.com/services/player/bcpid96975757001?bctid=995397723001

[4] http://earthlings.com

[5] http://www.vrg.org/nutrition/adapaper.htm

[6] http://veganbengaluru.wordpress.com/vegan-friendly-bangalore/treats/

[7] The China Study: Starting Implications for Diet, Weight Loss and Longterm Health. T.C. Campbell and T.M. Campbel. BenBella Books, 2006.

[8] Frys Vegetarian Chicken. Available at Namdharis and other Supermarkets. www.frysvegetarian.co.za

[9] http://vegan-india.blogspot.com

[10] http://bionutrients.in

[11] http://vegansociety.com


Friends, please feel free to use this post in whatever way you can, but whenever you use it, kindly consider mentioning a few words about our NGO Samabhava, or pointing others to these links: https://www.facebook.com/Samabhava or www.samabhava.org. Thank you very much!


நடிகர் தனுஷ்-2011 ஆம் ஆண்டின் சிறந்த வெஜிடேரியன்


நடிகர்/பாடகர்/இயக்குனர் என பல்வேறு முகங்களை தனக்குள்ள வெச்சிருக்க தனுஷ், சுற்றுச்சூழல் ஆர்வலர், மற்றும் மிருகங்களை நேசிக்கும் சிறந்த மனிதராகவும் தன்னை வெளிப்படுத்தறார். இங்கே படிங்க... 2011-ஆம் ஆண்டின் சிறந்த கவர்ச்சிகரமான சைவர்(VEGETARIAN) என நடிகர் தனுஷை  பீட்டா அமைப்பு மக்களின் ஓட்டு அடிப்படையில் தேர்வு செய்துள்ளது.. பெண்கள் மட்டும் சளைத்தவர்களா என்று மல்லிகா ஷெராவத்தும் இப்போட்டியில்(!) வெற்றி பெற்றுள்ளார்.





தனுஷ் இது பற்றி சொல்லும் பொழுது,
நான் சைவ உணவில் ரொம்ப லைட்டாவும், ரிலாக்ஸ்டாகவும் ஃபீல் பண்றேன். மேலும் ஒவ்வொரு தடவை  நான் சாப்பிட உட்காரும் போதும் சுற்றுச்சூழலுக்கு ஒரு நன்மை செய்யுறேன். வெஜிடேரியனா இருக்கறதுல பெருமைப் படறேன்.
இப்படி சொல்லியிருக்கார். இனிமேலும் நீங்க SOUP BOY இல்ல தனுஷ். இயற்கைக்கு நீங்க ஒரு சூப்பர் பாய்!

கோடான கோடி தனுஷ் ரசிகர்களுக்கும் இந்த நல்ல விஷயம் போய் சேரும் விதமா, தனுஷ் தன்னுடைய படங்களில் வெஜிடேரியனா இருப்பது பற்றிய நன்மையை ஒரு பன்ச் டயலாக் மூலம் சொன்னா நல்லாயிருக்கும். அடுத்த இடுகையில் மீண்டும் சந்திக்கிறேன்.

நன்றி,
காதலுடன்,
click here to read the report by PETA in ENGLISH