அன்பிற்குரிய கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கு
வணக்கம்!
அ
|
ன்பிற்கும் அரவணைப்பிற்கும் தியாக
உள்ளத்திற்கும் தெள்ளியதோர் விளக்கம்
கொடுக்கும் மகத்தான மறைநூல்
விவிலியம். நனிசைவ உணவுமுறை
பற்றி விவிலியம் கூறுவது
என்ன? இறைவன் மாமிசம்
உண்ண நம்மை நிர்ப்பந்த்திருக்கிறாரா?
இறைவன் அருளிய தூய
மறைநூல் உண்மையில் என்ன
சொல்கிறது? அவற்றை சைத்தான்
எவ்வாறு தனக்கு வேண்டிய
விதத்தில் வளைத்துக் கொண்டு,
இறை உணர்வை சிதைக்கிறது?
இதனால் நாம் உணர்வது
என்ன? [சைத்தான் என்பது இங்கே சுயநலம் கொண்ட, இறைவனை எதிர்க்கும் சில மனித ஜீவன்களை குறிக்கிறது.] இறைவன் மாமிசம்
புசித்தாரா? இத்தகைய கேள்விகளை
மனதிற்கொண்டு இறைநூலான
விவிலியத்தை நன்றாக ஆராய்ந்து
இக்கட்டுரையை உங்களிடம் சமர்பிக்கிறேன்.
இந்நற்செயலை நன்முறையில் செய்ய
எனக்கு பலமும் தைரியமும்
கொடுத்த இறைவனுக்கு நன்றி
கூறுகிறேன். மேலும் இக்கட்டுரையின்
முன்னேற்றத்திற்கும் நிறைவிற்கும் எனக்கு
துணை நின்ற என்
கிறிஸ்துவ நண்பர்கள் ஹெலென்
க்றிஸ்டி, அலெஃஸாண்டர் வேகான்,
ப்ரவீன்ராஜ், ஜான் ஸ்மித்,
மற்றும் சகோதரிகள் பிண்டு,
மோனிகா பாண்டியன் அவர்களுக்கும்
நன்றியை சமர்பிக்கிறேன். இக்கட்டுரையை
முடித்தபோது நான் உணர்ந்த்து
யாதெனின், அனைத்து உயிர்களினின்றும்
இறைவன் வசிக்கிறார். அனைத்து
உயிர்களிடமும் அன்பு செய்ய
வேண்டும் என்பதே இறைவனின்
கட்டளையாகும். இதை நீங்களும்
உணர்வீர்கள் என நான்
நம்புகிறேன். அனைத்து உயிர்களிடத்தும்
அன்பு செய்க, இறைவனைக்
காண்க! இறையருள் பெறுக!
கிறிஸ்துவ
மதமும்,
நனிசைவ
உணவுமுறையும்!
அ
|
ருட்தந்தை
Rev.ஜார்ஜ் மாக்மஸ் கூறுகிறார் “கடவுள் நமக்கருளிய மிகப்பெரிய கொடை
இப்பூமியில்
உள்ள
கனி
கொடுக்கும்
மரங்களும்,
விதை
கொடுக்கும்
கனிகளும்,
மரம்
கொடுக்கும்
விதைகளும்
ஆகும்.
ஆரோக்கிய
வாழ்விற்கு
இறைவன்
கூறும்
உன்னத
வழியானது
இயற்கையான
உணவுகளை
உண்டு,
உயிர்களிட்த்தில்
அன்பு
செலுத்துவதிலேயே
உள்ளது.
அன்றி
உயிர்களை
கொன்று
புசிக்கும்
இதயத்தில்
இறைவன்
வசிப்பதில்லை”
அந்திமக் காலத்தின் தொடக்கத்தில்
மனிதன் மற்றும் மனிதன்
அல்லாத விலங்கினங்கள், அல்லது
இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்மா
அல்லது ஆன்மா உடைய
அனைத்து உயிரினங்களும் தாவர
உணவையே உண்ண வகைசெய்யப்பட்டிருந்தன.
அவை நன்றாக இருந்தன!
இதுவே
ஆதியாகமம்
1:28-29-31 “பல்கிப்பெருகி மண்ணுலகை ஆளுங்கள். அங்கே கடல் மீன்களையும் நிலத்தில் ஊர்ந்து வாழும், விலங்கினங்களையும் ஆளுங்கள்.”
என்றார். அப்பொழுது கடவுள், “மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன். இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லா காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும்
பசுமையான
செடிகள்
அனைத்தையும்
நான்
உணவாகத்
தந்துள்ளேன்”.
என்றார். இதுவே இறைவன்
இவ்வுலகத்தைப் படைத்த உடன்
மனிதனுக்கு இட்ட முதல்
கட்டளை ஆகும்.
மேலும், “பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன். நீதிமான்களை அல்ல பாவிகளையே மனந்திருந்துவதற்கு
அழைக்கிறேன்”
என்கிறார் இறைவன் மத்தேயு 9:13
பலியையல்ல
இரக்கத்தையே
விரும்புகிறேன்
என்பதின்
அர்த்தம்
இன்னதென்று
நீங்கள்
உணர்வீர்களேயானால்
குற்றமற்றவர்களை
நீங்கள்
தண்டிக்க
மாட்டீர்கள்
என்கிறார்.
மத்தேயு
12:7
-இங்கே
குற்றமற்றவர்கள் என்பது மனிதர்களை
மட்டுமன்றி பிற உயிரினங்களையும்
குறிக்கிறது என்கிறார் டெட்
ஆல்டார் எனும் பெருமான்
கர்த்தர் மாமிசம் வாங்குவதையோ, உண்பதையோ ஆணித்தரமாக சொல்லும் வசனம் விவிலியத்தில் இல்லவே இல்லை
ஆங்கிலத்தில் John
(4:8) “Were gone
away unto the city to buy meat”
எனும் வசனத்தில் meat எனும் இச்சொல்லானது
பெரும்பாலும் மாமிசம் என்றே
தவறாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. ஆனால்
இதையே தமிழில் “அவருடைய
சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள்”
என்றே அர்த்தம் கொள்ளவேண்டும்.
சீஷர்கள் மாமிசம் வாங்க
வேண்டி செல்லவில்லை என்பது
இதன் மூலம் தெளிவாகும்.
கிரேக்க மொழியில் MEAT எனும்
வார்த்தை போஷாக்கு மற்றும்
போஜனம் என்பதையே குறிக்கிறது.
இதையே சைத்தான்கள் இறைவனின் வார்த்தைகளை தன் விருப்பம்போல் வளைத்துக் கொள்கின்றன என்று கூறினேன்.
இறைச்சிந்தனைகளை ஒருபோதும் தவறாக
அர்த்தம் கொள்ளக்கூடாது என்பதே
இதன் நோக்கமாகும். மேலும்
கவனிக்க செம்மறி ஆட்டிறைச்சியை
இறைவன் உண்டதாய் புதிய
ஏற்பாட்டில் கூட எந்தவொரு
வசனமும் சொல்லவில்லை.
இயேசு மீன் இறைச்சியை புசித்தாரா?
விவிலியத்தில் இரண்டு காலங்கள்,
குறிப்பாக இறைவன் மீன்
இறைச்சியை புசித்தார் என்பதை
மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், அவ்விரண்டு
நிகழ்வுகளும் கர்த்தர் மரித்து,
உயிர்த்தெழுந்த பின் நிகழ்ந்த
நிகழ்ச்சிகளாகும். மேலும், கிறிஸ்துவர்களின்
ஆதிகாலத்தில் மீன் என்பது
ஒரு அபூர்வார்த்தமான குறியீடாகவே(MYSTIC
SYMBOL) இருந்திருக்கிறது என்பதை
நினைவில் கொள்ளவேண்டும். கிரேக்க
மொழியில் மீன் என்பது
இஷ்த்திஸ்(ICHTHYS) என்று அழைக்கப்படும்.
அது(ICHTHYS)
“இயேசு கிறிஸ்து,
இறைவனின் மகன், இரட்ஷகன்(JESUS CHRIST, SON OF GOD AND SAVIOUR)”
என்பதின் சுருக்கமாக உபயோகப்படுத்தப்
பட்டிருக்கிறது. அதையே நாம்
மீன் இறைச்சி என்று
தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம். இதை நேரடியாக
அர்த்தம் கொள்ளாமல் பூடகமாக
அர்த்தம் கொள்ளல் வேண்டும்.
விவிலியமும் முரண்பாடுகளும்
விவிலியம் இன்னமும் நிறைவடையவில்லை
என்பதையும் அதனுள் இருக்கும்
முரண்பாடுகளைக் களைய சிந்தை
மிக்க விளக்கங்கள் மேலும்
தேவை என்பதை நாம்
மறக்க கூடாது. உதாரணமாக
ஆதியாகமம் 1:29-30 மற்றும் ஆதியாகமம்
9:2-3 இவற்றுக்கிடையே உள்ள முரண்பாட்டை
நாம் நோக்கலாம். கொரிந்தியர்
10:20 இல்
இறைவன் கூறுகிறார்
அஞ்ஞானிகள் பலியிடுவதை
தேவனுக்கு இல்லாமல்
பேய்களுக்கே படைக்கிறார்கள்.
முரண்பாடுகளினின்றும் விடுபட்டாலொழிய விவிலியம் முழுமையாகாது என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.
ஆதியாகமம் 1:29-30
மற்றும் ஆதியாகமம் 9:2:3 இவற்றுக்கிடையே
உள்ள முரண்பாட்டை அருட்தந்தை
பால் ஜேக்கப் இவ்வாறு
விவரிக்கிறார்:
“ஆதியாகமம்
முதல் அதிகாரம் 29 ஆம்
வசனத்தில் இறைவன் மனிதனுக்கு
சைவ உணவையே புசிக்கச்சொல்லிக்
கட்டளையிட்டிருக்கிறார். ஆனால் மனிதன்
தொடர்ச்சியாக செய்யும் பாவங்கள்,
மற்றும் பாவ காரியங்கள்
ஆகியவற்றைக் கண்டு மனம்
வருந்திய இறைவன் பெருவெள்ளம்
சூழக்செய்தார். பெருவெள்ளத்திற்கு பின்
மனிதனுக்கு எழுதப்பட்ட வசனம்
ஆதியாகமம் 9:2-3.
இதில் இறைவன் மனிதன்
உணவு முறை குறித்து
கட்டாயங்கள் எதையும் குறிப்பிடவில்லை.
ஆதாவது, சைவ உணவு
என்பது பெருவெள்ளத்திற்கு முன்பே
கட்டாயம் செய்யப்பட்டிருக்கிறது, ஆகையினால், இறைவன்
அதனை அவசியம் என்றோ
மரபின் அம்சமாகவோ குறிப்பிடவில்லை.
மனிதனும் தன் போக்கில்
மாமிச உணவை அத்தியாவசியமாக்கிக்கொண்டான்.
மேலும், முரண்பாட்டை பற்றி
அலசும் போது அப்போஸ்தலர்
15:20
மற்றும் வெளி 2:14 ஆகியவை இங்கே
குறிப்பிடத்தக்கவை.
அப்போஸ்தலர் 15:20
விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும்,
நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும்,
விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
வெளி 2:14
ஆகிலும், சில காரியங்களைக்குறித்து
உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப்
படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
இதை வாசித்து விட்டு
கொரிந்தியர் 10:14-33 வசனங்க்ளை
வாசிக்கும்பொழுது மேலுமொரு
முரண்பாடு நம் கண்ணில்
பட்டது. அதாவது, புதிய
ஏற்பாட்டில் விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட
மாமிச உணவு வன்மையாக
கண்டிக்கப் பட்டிருக்கிறது. ஆனால்,
அப்போஸ்தலர் பால், மாமிசம்
புசிப்பது பிறர் கண்டனத்திற்கு
உள்ளாகாதவரை தவறே அல்ல
என்கிறார். இது, அப்போஸ்தலர்
பால் கிறிஸ்துவுக்கு முரணாக
பேசுவது போல் உள்ளது.
பழம்பெரும் கிறிஸ்துவர்களின் உதாரணங்கள்
சைவ உணவு முறையே
கிறிஸ்துவின் போதனைகளோடு சரியாக
ஒப்புச்செல்கின்றன என்று
பல்வேறு பழம்பெரும் கிறிஸ்துவப்
பெரியோர்கள் நிரூபித்துக் கூறியுள்ளார்கள்.
பழம்பெரும் அலெக்ஸான்ட்ரியா தேவாலயத்தின்
அருட்தந்தை க்ளெமெண்ட், ஓரிகென்,
டெர்டுயில்லன், ஹிரானிமஸ், போனாஃபைஸ்,
தூய ஜெரோமியர், ஜான்
க்றிசோஸ்டாம் போன்ற கிறிஸ்துவப்
பெரியோர்கள் சைவ உணவையே
இறைவனின் ஸ்பரிசத்திற்குட்பட்ட உணவாக
பரிந்துரைக்கிறார்கள். அருட்தந்தை க்ளெமெண்ட்
எழுதுகிறார்,
“உங்கள் உடலை இறந்து போன ஜீவராசிகளுக்கு ஒரு இடுகாடாய் இருப்பதை விட சைவ உணவை உண்டு நீங்கள் ம்கிழ்ச்சியாக இருக்கலாம். அதனாலேயே அப்போஸ்தலர் மத்தேயு நரமாமிசத்தை விடுத்து விதைகளையும் பழங்களையும் காய்கறிகளையுமே உண்டு வாழ்ந்திருக்கிறார்.”
பழம்பெரும் கிறிஸ்துவ கோப்புகளில்
ஒன்றான, இரண்டாம் நூற்றாண்டை
சேர்ந்த தூய. பன்னிரண்டாம்
பீட்டர் ஹோமிலி(ST. PETER HOMILY
XII)
அவர்களது போதனைகளை கொண்ட
க்ளெமெண்டைன் ஹொமைல்ஸ்(CLEMENTINE HOMILES) என்ற
புத்தகம் மாமிச உணவு
பற்றி கூறுகையில் “ இயற்கைக்கு எதிராக மாமிசம் புசிப்பது இறைவனை எதிர்த்து பேய்களுடன் விருந்து புசிப்பதற்கு சமானமாகும். அது இறைவன் துளியும் விரும்பாத பலிகளையும், அசுத்தமான விருந்துகளையும், கொண்டு அசுத்தத்தின் அடையாளமாக விளங்குகிறது. இத்தகைய செயலில் கலந்து கொள்ளும் மனிதன் சைத்தான்களுடன் உணவு புசிக்கும் பேயாக மாறிவிடுகிறான்”.
இவ்வாறு தெளிவாக அசைவ உணவு பற்றி கூறுகிறது.
பழங்காலம் தொட்டு இப்போது
வரை நாம் பார்க்கும்
பல தேவாலயப் பாதிரிகளும்
மடாலயங்களைச்சார்ந்த துறவிகளும்
சைவ உணவையே உட்கொள்கிறார்கள்.
மறைமுகமான வரலாற்று ஆதாரங்கள்:
கிறிஸ்துவப் பழங்குடிகளான ஏஸேனியர்கள்(ESSENES)
மற்றும் நசோரியர்கள்(NAZOREANS) ஆகியோரது
வாழ்க்கை முறைகளை ஆராய்ந்து
கண்டு அறிந்ததில் இயேசு
கிறிஸ்து சைவ உணவை
உட்கொண்டார் என்பதையே குறிப்பால்
உணர்த்துகிறது. நசோரியர்கள்(NAZOREANS) என்றழைக்கப்படும் உலகின் முதல்
கிறிஸ்துவர்கள்,(NOT NAZARENES), சைவ
உணவே உட்கொண்டிருக்கிறார்கள். அவர்களது
நேரடி தலைமுறையான எபையோனிகள்(EBIONETES)
சைவ உணவே உட்கொண்டிருக்கிறார்கள். இது பழம்பெரும்
கிறிஸ்துவ மதம் ஆரம்பகட்டங்களில் சைவ உணவு
முறையையே மேற்கொண்டிருந்தது என்பதை
தெளிவாக உணர்த்துகிறது.
அப்போஸ்தலர் பால் சைவ
உணவு புசிப்பதை பற்றி
அதிகமாக எழுதியிருக்கிறார், அவர்
சைவர்களைப்பற்றி அதிகம்
கூறவேண்டியிருந்திருக்கிறது. இதுவே
ஆரம்பகால கிறிஸ்துவ மதம்
எந்த அளவுக்கு சைவ
உணவு முறையை மேற்கொண்டிருக்கிறது என்பதற்கு ஒரு
தக்க சான்றாகும்.
அப்போஸ்தலர் பால், அவரது
வார்த்தையில் உண்மையாக இருந்தார்
என்றால், எபையோனிகளுக்கு எதிராக
மாமிச உணவை ஆதரிக்காது
அவரும் நிச்சயமாக சைவ
உணவையே உண்டிருக்க வேண்டும்.
ஏனென்றால்,
ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடர் உண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காத படிக்கு,
என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்-
-கொரிந்தியர் 8:13
அலெக்ஸான்டரியாவின் க்ளெமெண்ட்
என்பாரின் கூற்றின் படி
மத்தேயு ஒரு சைவர்.
க்ளெமென்டைன் போதனைகள், மற்றும்
புரிதல்களின் படி தூய
பீட்டர் ஒரு சைவரே.
ஹெகிஸிப்பஸ் மற்றும் அகஸ்டின்
இருவரும் இயேசு மரித்ததற்குப்
பின் ஜெருசலேம் தேவாலயத்தின்
முதல் தலைவரும், இயேசு
கிறிஸ்துவின் உடன் பிறந்த
சகோதரரும் ஆகிய ஜேம்ஸ்
பிறந்தது முதல் சைவ
உணவிலேயே வாழ்ந்திருக்கிறார் என்பதை
நிரூபித்திருக்கிறார்கள். எனவே
அவ்வாறே இயேசு கிறிஸ்துவும்
நிச்சயமாக சைவ உணவிலேயே
வாழ்ந்தார் என்பது சொல்லித்
தெரியவேண்டாம். ஏனென்றால், இயேசு
கிறிஸ்துவின் பெற்றோர் ஜேம்ஸை
சைவராய் வளர்த்திருப்பதால், அவ்வாறே
இயேசு கிறிஸ்துவையும் வளர்த்திருப்பர் என்பது உறுதியாகிறது.
முடிவுரை:
இக்கட்டுரையின் முடிவில், இதுவரை
சொல்லப்பட்டுள்ள விவரங்களின்
படி,
சைவ/தாவர
உணவு முறை, கட்டாயம்
என்று சொல்லப்படவில்லை எனினும்,
பழம்பெரும் கிறிஸ்துவ மதத்தின்
மரபின் அத்தியாவசிய அங்கமாக
குறிக்கப்படவில்லை எனினும்,
சைவ உணவு முறையே,
இறைவனின் ஸ்பரிசத்திற்கு உகந்த
இரக்கம், கருணை, ஜீவகாருண்யம்,
அஹிம்சை போன்ற உயர்ந்த
சிந்தனைகளை மையமாக வைத்து
வாழ்ந்த உன்னத கிறிஸ்துவின்
கொள்கைகளோடு ஒப்பிடும் படி
இருக்கிறது என்பதை உங்களுக்கு
உணர்த்தியிருக்கும். மேலும், இறைவனின்
கொள்கைகள் எப்பொழுதுமே வன்முறை,
வீண் பகட்டு, ஆடம்பரம்,
படாடோபம், அநியாய வழியில்
வரும் செல்வம் போன்றவைகளை
எதிர்த்தே அமைந்துள்ளன. ஆனால்
மாமிச உணவு இறைவனுக்கு
எதிராக உள்ள அனைத்து
தீய அம்சங்களையும் கொண்டுள்ளது
என்பதை குறித்தாக வேண்டும்.
பணம் படைத்தவர்களின் பகட்டு
கௌரவமே மாமிச உணவை
படைப்பதாகும். இதர ஜீவராசிகளின்
மேல் திணிக்கப்படும் வன்முறையே
அசைவ உணவாகும். அது
அநியாய செல்வத்தின் வெளிப்பாடே
ஆகும்.
முன்னாள் அருட்தந்தை க்றிஸ்டியன்
ஹெய்ரோனிமஸ் என்பாரின் பொன்னான
கிறிஸ்துவ மரபு ஒன்றைக்
கூறி இக்கட்டுரையின் முடிவுரையை
நிறைவு செய்ய விரும்புஇறேன்.
மாமிசம் உண்பதோ,
மிருகங்களை உண்பதோ பெருவெள்ளம் ஏற்படும் வரை எந்த மனிதனும் அறியவில்லை. ஆனால், பெருவெள்ளத்தில் நொடிந்து போயிருந்த மனிதர்களின் வாயில் இறந்து மிதந்த மீன்கள் மற்றும் மிருகங்களின் மாமிசமும், அவைகளின் இரத்தமும, நுழைந்து அசுத்தத்தை விதைத்து விட்டன.
அவை பாலைவனத்தில் பசியில் வாடும் மனிதனுக்கு முன்பு வீசப்பட்ட எச்சமடைந்த பறவையைப் போல மனிதனை தவறான மற்றும் ஈனமான சுவையை நோக்கி திசைதிருப்பி விட்டன.
பெருவெள்ளத்தின் நோக்கம் முடிந்தபின்னர், முடிவின் ஆரம்பமாக இயேசு கிறிஸ்து தோன்றி,
மக்களோடு மீண்டும் ஐக்கியமானார். எனவே நாம் மாமிசம் உண்பது இதற்கு மேலும் அனுமதிக்கப் படவில்லை.
நன்றி
மாமிச உணவு
உங்களைக் கிறிஸ்துவின் இரட்சணையினின்றும்,
ஒளியினின்றும் தூர வைத்துவிடும்.
அனைத்து உயிர்களிலும் இறைவன் வசிக்கிறார். ஒருகாலும்,
இறைவன் படைத்த ஒரு
ஜீவராசி துன்பத்தில் உழல
நீங்கள் காரணமாக வேண்டா.
அனைத்து உயிர்களையும் நேசியுங்கள்.
அப்போது இறைவன் உங்களை நேசிப்பார்.
நன்றி.