இஸ்லாம்-உயிர்களின் முக்கியத்துவம்

நான் முன்பு கூறியிருந்ததைப் போலவே, இங்கு மனிதத்தை மட்டுமே விதைக்க விரும்புகிறேன். மதங்கள், சமயங்கள், போன்றவற்றை இறைவனை அடைக்கப் பயன்படுத்தப்படும் தங்கக்கூண்டுகளாகவே நான் கருதுகிறேன். இறைவன் ஒருவனும் பலவும், சிறிதும் பெரிதும், என அனைத்துமாய் இருக்கிறான். அவனை சமயங்கள் எனும் கூண்டில் அடைத்து மனிதன் வேடிக்கை பார்க்கிறான். ஆனால், மதங்கள், சாதிகள், சமயங்கள் மூலம் மனிதனை வகைப்படுத்த முடியுமே ஒழிய மனிதத்தை வகைப்படுத்த முடியாது. ஏனென்றால், மனிதமும் இறைவனும், மிகப்பெரியனவும், ஒன்றோடொன்று இழைந்ததும் ஆகும். மனிதத்தையும், இறைவனையும் எந்த மதத்தாலும், சாதியாலும், சமயத்தாலும் அடக்கிவிடவே முடியாது. சில சமயங்கள் மற்றும் மதங்களின் பேரில் அசைவம் உட்கொள்வது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று வாதங்கள் எழுவதுண்டு. அவற்றுள் முக்கியமான ஒன்று இஸ்லாமிய வாதங்கள். ஆனால், உண்மையில் இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பல இஸ்லாமியர்கள் அறியாமல் இருப்பது நன்றன்று. எனவே, இஸ்லாமிய சமயம் மிருகங்களை உணவுக்காகவும், பிற தேவைகளுக்காகவும் பலியிடப்படுவது குறித்து சொல்லும் நெறிகளை கூடிய விரைவில் இங்கே பதிவு செய்கிறேன். கற்றுணருங்கள் இஸ்லாமியத்தோழர்களே!

ALLAH MALIQ!!!

புரதம் - சில மூடநம்பிக்கைகள்


தாவர உணவு வகைகளில் புரதமே கிடையாது என்று இன்றுவரை சில மூடர்கள் நம்பி வருகிறார்கள். மேலும், தாவர உணவு உண்ணும் ஒருவருக்கு தேவையான அளவு புரதம் ஒருபோதும் கிடைக்காது என்ற மூடநம்பிக்கையும் மக்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால், பல்வேறு உணவுமுறை மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்ட உண்மை யாதெனில், தாவர உணவு வகைகளே உடலுக்கு தேவையான சரியான அளவு புரதத்தை கொண்டுள்ளன. ஏனெனில், புரதம், அளவுக்கு சற்று மிஞ்சினாலும் கொழுப்பாக மாறி ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும். கட்டுடல் பெறவும், உடல் எடை அதிகரிக்கவும் சிலர் மாமிச உணவே புரதத்தின் சிறந்த ஆதாரமாக்க் கருதுகின்றனர். ஆனால், மாமிச உணவும், பால் பொருட்களும் கொண்டுள்ள புரதம் கொழுப்பின் வடிவமே என்பது பலரும் அறியாத ஒன்று.
மாமிச உணவும், பால் பொருட்களும் அடங்கிய உணவு முறை, இந்தியாவில் பரவலாகக் காணப்படுகின்றது.  இது, அளவுக்கு அதிகமான புரதத்தை கொண்டுள்ள உணவு முறையாகும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே? இது, உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையான பிரச்சினைகளைக் கொடுக்கும். அவை:
  • சிறுநீரக உபாதை: அளவுக்கதிகமான புரதத்தை உட்கொள்ளும் போது நாம் அளவுக்கு அதிகமான நைட்ரோஜென் (NITROGEN) வாயுவை உட்கொள்ளுகிறோம். இது சிறுநீரகத்தில் தேவையற்ற நைட்ரோஜென் வாயுவை சிறுநீர் மூலம் வெளியேற்றும் வகையில் ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறது. இதுவே நாளடைவில் சிறுநீரகத்தின் செயல்பாட்டுக்கு பெரும் ஊறு விளைவிக்கிறது. எனவே, சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் புரதம் குறைந்த உணவு முறையை மேற்கொள்வது பரிந்துரைக்கப் படுகிறது. அத்தகைய உணவு முறை, அளவுக்கதிகமான நைட்ரோஜென் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சிறுநீரகப் பிரச்சினைகள் வராமல் தடுக்கவும் செய்கிறது.
  • புற்றுநோய்: புற்றுநோய் பெரும்பாலும் தேவையற்ற கொழுப்பின் காரணமாக உருவாகின்றது என்று நாம் நினைத்தாலும், புரதமும் புற்றுநோய் உருவாக ஒரு காரணம் என்பது பலரும் அறியாத ஒன்றாகும். ஆராய்ச்சியாளர்கள் கூறுவது என்னவென்றால், நார்ச்சத்து இல்லாத உணவு வகைகள், மற்றும் மாமிச உணவுகளில் இருக்கும் இயற்கையான புற்றுநோய் காரணிகள் போன்றவை புற்றுநோய் உருவாக பெரும் காரணமாக விளங்குகின்றன. மேலும், மாமிச உணவை அன்றாடமாக்க் கொண்டிருக்கும் மக்கள், கோலான் புற்றுநோயின்(COLON CANCER) தாக்கத்திற்கு மிகவும் சமீபத்தில் இருக்கிறார்கள். அமெரிக்கப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தின், “உணவு, ஊட்டச்சத்து மற்றும் புற்றுநோய் தடுப்புப்பிரிவின் ஆராய்ச்சியில் மாமிச உணவு சில குறிப்பிட்த்தக்க புற்றுநோய் வகைகளின் காரணியாக விளங்குவது தெரிய வந்துள்ளது.
  • எலும்பு முறிவு மற்றும் சிறுநீரகக் கல்: மிருகப் புரதம் நிறைந்த உணவு, மனிதனின் செரிமானத்தில் அபாயகரமான சில விளைவுகளை உருவாக்குகின்றன. அவை, சிறுநீரகத்தை இயல்பு நிலைக்கு அதிகமான கால்சியத்தை சிறுநீர் மூலமாக வெளியேற்றச் செய்கிறது. இதன் மூலம், எலும்புகளுக்குத் தேவையான சுண்ணாம்புச்சத்து கிடைக்காமல் போகின்றது. இறுதியில் எலும்புகள் எளிதில் தேய்மானத்திற்கு உள்ளாகின்றன. இடுப்பு வலி, மற்றும் எலும்பு முறிவு போன்றன புரதம் குறைந்த உணவு முறையை மேற்கொள்ளும் நாடுகளில் மிகவும் குறைந்த அளவே காணப்படுகின்றன.

மேலும், அபரிமிதமான கால்சியம் வெளியேற்றப்படுவதால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.

“141.75 கிராம்(34 கிராம் புரதம்) மீன் உணவு உட்கொள்ளுதல் சிறுநீரகக் குழாய்களில் கல் உருவாகும் அபாயத்தை 250 சதவிகிதம் அதிகரிப்பதாகஇங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று சமீபத்தில் கண்டறிந்துள்ளது.

விளையாட்டு வீர்ர், வீராங்கனைகளுக்கு அளவுக்கதிகமான புரதம் தேவை என்று வெகு காலமாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் விளையாட்டு வீர்ர்களுக்கு மிகவும் அளவான புரதமே போதுமானது. எனவே நனிசைவ உணவு முறை விளையாட்டில் சிறக்க விரும்பும் வீர்ர் வீராங்கனைகளுக்கு மிகவும் உகந்தது.

அளவான ஆனால் சிறந்த புரதச்சத்து கொண்ட உணவுமுறையை மேற்கொள்ள விரும்புபவர், தனது உணவு முறையில் உள்ள மாமிச உணவுகளை தவிர்த்தாலே போதும்.

நனிசைவ உணவுமுறை உடல் எடையை மிகவும் சிறந்த கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகிறது. அதே சமயத்தில், புரதச்சத்தும் தடையின்றி கிடைக்கிறது

நனிசைவ உணவுமுறை _ திட்டமிடுதல்


நனிசைவ உணவுமுறையை திட்டமிடுவது மிகவும் சுலபமானது. தானியங்கள்,  விதைகள், கிழங்கு வகைகள், போன்றவை, இரும்புச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்தனவாகும்.  பச்சை தாவரங்கள், இலைகள்(கீரை), பீன்ஸ், முளைவிட்ட பயறு வகைகள், சோளம், கடலை வகைகள், பருப்பு வகைகள் போன்றவை கால்சியம் மற்றும் புரதத்தின் உறைவிடமாகத் திகழ்கின்றன. சோயா பால் மற்றும் செரிவூட்டப்பட்ட பழரசங்களும் அவ்வாறே புரதமும், கால்சியமும் நிறைந்து விளங்குகின்றன. இவற்றை தற்போதைய அசைவ உணவுமுறையில் உள்ள மாமிசங்களின் இடத்தில் வைக்கும் போது நனிசைவ உணவு முறையை நீங்கள் கையகப்படுத்துகிறீர்கள்.

சூரிய ஒளி நம் தோல் பரப்பின் மீது விழும்போது, நமது உடலில் உள்ள செல்கள், வைட்டமின் D யை இயல்பாகவே உற்பத்தி செய்து விடுகின்றன. காலை நேர சூரிய ஒளியானது வைட்டமின் D யின் சிறந்த உறைவிடமாகும்.
மேலும், சூரிய ஒளியின் சக்தி குறைவாக இருக்கும் இடங்களில் (பூமத்திய ரேகையின் வடக்கே இருக்கும் நாடுகள்) செரிவூட்டப்பட்ட உணவு வகைகள் மூலமாக வைட்டமின் D யை பெற்றுக்கொள்ளலாம்.

வைட்டமின் B12 அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தாகும். செரிவூட்டப்பட்ட தானிய வகைகள், காளான், சோயா பால், மற்றும் சில உணவாதாரங்களில் அனைத்து வகையான வைட்டமின் சத்துக்களும் இருக்கும். தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும், வைட்டமின் B12 மிகவும் அவசியம். பதனிடப்பட்ட, அல்லது பேக் செய்யப்பட்ட உணவுகளை வாங்கும் போது, அதன் லேபிலில் (LABELS) சையானோகோபாலாமின் (CYANOCOBALAMIN) என்ற பெயர் இருக்கிறதா என்று பாருங்கள். இதுவே, வைட்டமின் B12-ன் எளிதில் உட்கொள்ளக்கூடிய வடிவமாகும்

எனவே, நனிசைவ உணவுமுறையை திட்டமிட நீங்கள் பெரிதாக மெனக்கெடுக்க வேண்டியதில்லை. அது, உங்கள் சுற்றத்திலேயே, இயல்பாக பல சத்துக்களை கொண்ட காய்கறிகள் மூலம் உங்கள் உணவு முறையில் சேர்கிறது. மாமிச உணவுப் பொருட்களைத் தவிர்ப்பதன் மூலம் உடலும் மனமும் பெரும் ஆரோக்கியத்தைப் பெறுகிறது.